chennireporters.com

பட்டா வழங்க 68 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் மணிகண்டன் மீது கமிஷ்னரிடம் புகார்.

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் 68 லட்ச ரூபாய்  லஞ்சம் வாங்கி கொண்டு பட்டா வழங்காமல் பொது மக்களுக்கு பட்டை நாமம் போட்ட ஆவடி  தாசில்தார் மணிகண்டன் மீது ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செல்வராஜ்

திருவொற்றியூர் அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த ஒன்றாம் தேதி ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் இடத்தில் ஒரு புகார் அளித்தார்.  அந்த புகாரில் திருவொற்றியூரில் உள்ள அண்ணாநகர் குடியிருப்போர் நல சங்கம் என்ற பெயரில் சங்கம் நடத்தி வருவதாகவும் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

எனவே அந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் 325 நபர்களுக்கு பட்டா வாங்கி தர நான் எங்கள் பகுதியைச் சேர்ந்த அதாவது பொன்னேரி தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன்  இடத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மூன்று சென்ட் வீதம் பட்டா தர வலியுறுத்தி  68 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாக கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை நேரடியாக தாசில்தார் மணிகண்டன் இடத்தில் செல்வராஜ் கொடுத்துள்ளார்.

மேலும் சில வருடங்கள் பட்டா தராமல் மணிகண்டன் ஏமாற்றி வந்தார்.  இந்த நிலையில் தாசில்தார் பொதுமக்களை ஏமாற்றுவதை புரிந்து கொண்ட பொதுமக்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் மூலம் மணிகண்டனை நேரில் சந்தித்து பணத்தை கேட்டனர் அப்போது 15 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு மீதி பணத்தை தராமல் தாசில்தார் மணிகண்டன் ஏமாற்றி வந்ததாக சொல்கிறார் தலைவர் செல்வராஜ்.  இந்த நிலையில் பொதுமக்களிடம் பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத செல்வராஜ் வழக்கறிஞர்கள் மூலம் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப்பாய் ரத்தோரை சந்தித்து புகார் அளித்தனர் .

அந்த புகாரை தருவதற்கு பலவிதத்தில் தாசில்தார் மணிகண்டன் முட்டுக்கட்டை யாக இருந்தார் என்று சொல்லுகிறார்  வக்கீல் அப்துல்லா. , ஏழை மக்கள் கூலி வேலை செய்து ரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தையும் தராமல்  பட்டாவையும் தராமல்  ஏமாற்றி பணம் பறித்த தாசில்தார் மணிகண்டன் சம்பந்தப்பட்ட  செய்தி தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

அது தவிர தாசில்தார் மணிகண்டன் சம்பந்தப்பட்ட பொதுமக்களை மிக அவமரியாதையாகவும் வீட்டில் உள்ள பெண்களை மிக கேவலமாக பேசுவதாகவும் புகாரில் கூறியுள்ளனர் இதுகுறித்து தாசில்தார் மணிகண்டனிடம் நாம் விளக்கம் கேட்க  அவருடைய செல்போனை நாம் பலமுறை தொடர்பு கொண்டோம் அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஆவடியில் உள்ள சில பத்திரிகையாளர்கள் செய்தியை வராமல் தடுப்பதாக சொல்லி தாசில்தார் மணிகண்டனிடம் சில லட்ச ரூபாய் பணம் பெற்றதாக சொல்கிறார்கள்.

சில  போலீஸ் அதிகாரிகள் ஒரு சில மிகப்பெரிய தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்று சொல்லி பல இடஙுகளில் பணம்  பறித்து வருகின்றனர்.   ஏற்கனவே ஆவடியில் உள்ள சில பத்திரிகையாளர்கள் தனுஜா டயானா என்கிற வருவாய் ஆய்வாளரை தாசில்தார் மதன் குப்புராஜ் என்பவர் மிக கேவலமாக பேசி சாதி பெயர் சொல்லி திட்டிய சம்பவத்தில் தாசில்தார் மதனிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு செய்தி போடாமல் தடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!