chennireporters.com

திருவள்ளூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு.

கோடை காலத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது . இதனால் பொதுமக்கள் தூக்கமில்லாமல் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை சரி செய்து தர வேண்டும் என்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி பட்டாபிராம், தண்டுறை, கோபாலபுரம்,  திருவள்ளூர், காக்களூர், செங்குன்றம், பாடி நல்லூர், வடகரை, பெரியபாளையம், பூந்தமல்லி, சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் நள்ளிரவு ஒரு மணி மற்றும் 2 மணிக்கு மேல் 3 மணி நேரம் தொடர்ந்து மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர்.  பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் ட்ரான்ஸ்பார்மர் பழுதாகிவிட்டது என்று சொல்லுகின்றனர்.

ஆனால் ட்ரான்ஸ்பார்மர் பழுதாகாமல் இவர்களே டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் மின்சாரத்தை சேமித்து விடுகின்றனர். மின்சாரத்தை சேமிக்க இவர்களை இதுபோன்று டிரான்ஸ்பார்மரை ஆப் செய்கின்றனர் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

கோடை காலத்தில் வீட்டு வாசலில் பொதுமக்கள் பல மணி நேரம் தூங்காமல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் பொது மக்களுக்கு தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

 

தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இரவு நேரத்தில் பணியாற்றும் மின்சாரத்துறை ஊழியர்கள் குடித்துவிட்டு பணியாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தவிர போன் ரிசீவரை எடுத்து கீழே வைத்துவிட்டு குடிபோதையில் நன்றாக தூங்கி விடுகின்றனர் என்கின்றனர் மக்கள்.

ஆனால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஈபி அலுவலகங்களுக்கு நேரில் சென்று கேட்கின்ற போது மெயின் சப்ளை ஆஃப் ஆகி உள்ளது.

நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதில் பதில் அளிக்கின்றனர் எனவே அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாத வகையில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் தங்கு தடை என்று மின்சாரம் வழங்க வேண்டும் என்கின்றனர்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடை என்று மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்கின்றனர் தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். இந்த கோடை காலத்தில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க திராவிட மாடல் ஆட்சி செயல்படுமா என்று பொதுமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்

இதையும் படிங்க.!