chennireporters.com

டெல்லி துணை முதல்வர் கைது சிபிஐ அதிரடி.

போலி வழக்கில் டெல்லி துணை முதல்வர், கல்வி தந்தை மனிஷ் சிசோடியா கைது!
பிஜேபி அடாவடி!!
தமிழக ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் கண்டனம்!!!

டெல்லி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது மோடியின் கைக்கூலி சிபிஐ.

புதிய மதுபான கொள்கை ஊழல் என்ற போலி வழக்கில், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மணீஷ் சிசோடியா இன்று காலை சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னதாக, தன்னை மோடி போலி வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டு ஆம் ஆத்மி அரசு மீது மோடியின் சிபிஐ பழி சுமத்தி வந்தது.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்ற நிலையில், சிபிஐ விசாரணை தொடர்ந்து வந்தது.

மதுபான கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் சிசோடியா.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் ஏழெட்டு மாதங்கள் சிறையில் இருந்தால் கூட, என்னை நினைத்து வருத்தப்படாதீர்கள். பெருமை கொள்ளுங்கள். பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயப்படுகிறார். எனவே, என்னை ஒரு போலி வழக்கில் சிக்க வைக்க விரும்புகிறார்’ எனக் குற்றம்சாட்டினார்.

 

இந்நிலையில், 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது சிபிஐ. இது முற்றிலும் பழி வாங்கும் நடவடிக்கையே ஆகும் இதை தமிழக ஆம் ஆத்மி கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஜனநாயகம் காத்திட போலி வழக்கில் கைது செய்யபட்டிருக்கும் திரு மனிஷ் சிசோடியாவ உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய ஒன்றிய அரசை கடும் கண்டனதுடன் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

 

இதையும் படிங்க.!