chennireporters.com

#dmk; உதயநிதி பெயர் சொல்லி உ.பிக்களை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர்.

அமைச்சர் உதயநிதி பெயரை சொல்லி தனது சொந்த கட்சிக்காரர்களையே ஒன்றி செயலாளர் ஒருவர் மிரட்டி வருகிறார் என்று ஒரு செய்தி நமது அலுவலகத்திற்கு புகாராக அனுப்பப்பட்டிருந்தது. அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது.

திருவள்ளூர் அருகே உள்ளது ஈக்காடு ஒன்றியம் இந்த பகுதியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் புஜ்ஜிராமகிருஷ்ணன். இவர் ஒன்றியத்தின் கீழ் 13 பஞ்சாயத்துகள் அடங்கியுள்ளது. இந்த 13 பஞ்சாயத்து நிர்வாகத்தில் ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் தலையிட்டு தன்னை மீறி எந்த பணிகளும் செய்யக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர்களை மிரட்டி வருகிறார் . அது தவிர தனக்கு எதிராக பேசும் கவுன்சிலர்களை கட்சியை விட்டு கட்டம் கட்டி விடுவேன் என்று மிரட்டிய வருகிறார்.

திமுக ஒ.செ. புஜ்ஜிராமகிருஷ்ணன் 

அது தவிர அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் பணிகளில் ஒரு பணிகள் கூட வேறு ஒரு ஒப்பந்ததாரரை டெண்டர் பணம் கட்ட அனுமதிப்பதில்லை . இவரே தன்னுடைய பெயரில் உள்ள ஆர் எம் என்டர்பிரைசஸ் என்கிற பெயரில் எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலைக்கான டெண்டர் ஒப்பந்த பணத்தை இவர்தான் கட்டுவார்.  ஒருவேளை வேறு யாராவது எங்கள் பகுதி வேலையை நீங்கள் செய்யக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்தால் அவர்களுக்கு அந்த பணியை செய்ய அனுமதித்து விட்டு பணிக்கான பணத்தை இவர் தான் வழங்குவார்.

டெண்டர் இவர் பெயரில்தான் ஒதுக்கப்படும். ஆனால் ஒப்பந்த பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கோ அல்லது பஞ்சாயத்து தலைவருக்கோ முழு பணத்தை தராமல் ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியைக் காட்டிலும் கூடுதலாக 20 சதவீத பணத்தை இவர் தன்னுடைய பங்காக, கட்டிங்காக, மாமூலாக, லஞ்சமாக எடுத்துக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் இவரால் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள்.

CM MK Stalin writes to PM Modi, urges Centre to do away with NEET in Tamil Nadu amid paper-leak row | Today News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அது மட்டும் இல்லாமல் எம்.எல்.ஏ. விடம் தான் சொல்லும் நபர்களுக்கு தான் சிபாரிசு கடிதமோ அல்லது எந்த வித உதவிகளையோ செய்ய வேண்டும் இல்லை என்று சொன்னால் எம்எல்ஏ வை எதிர்த்து இவர் அரசியல் செய்வாராம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றிய செயலாளர் பரிந்துரை கடிதத்தை வழங்கமாட்டேன் என்று மிரட்டு வாரம். அதேபோல தன்னுடைய வீட்டு வேலைகள் மற்றும் தோட்டத்து வேலைகளை தன் கட்சிக்காரர்கள் பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் யாரும் செய்யவில்லை என்று சொன்னால் அவர்களுக்கு அடுத்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு தர மாட்டேன் என்று மிரட்டுகிறாராம் .

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சசிகாந்த் செந்தில் கொடுத்த பூத் கமிட்டி பணத்தை ஒருவருக்கு கூட திமுக ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் தரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தவிர யாராக இருந்தாலும் என் வீட்டிற்கு வந்து வெளியே கைகட்டி நின்று பிச்சை கேட்பதைப் போல கேட்டால் தான் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன் அண்ணன் யாரு தெரியுமா என்கிற ரேஞ்சில் உடன்பிறப்புகளிடம் பேசுகிறாராம்.

அது தவிர தன்னுடைய ஒன்றியத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணத்தை தயார் செய்து ஆட்டைய போடும் பாஜக பிராடு நிர்வாகிகளுக்கு தனது சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சி பாடு இன்றி ரத்த சொந்தங்களுக்காக பாடுபடுகிறாராம். பல கிளை செயலாளர்கள் மாவட்ட செயலாளருக்கும் கட்சி தலைவருக்கும் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும் பல புகார் கடிதங்களை எழுதியிருக்கின்றனர்.

புஜ்ஜி ராமகிருஷ்ணனை உடனடியாக மாற்ற வேண்டும் இல்லை என்று சொன்னால் கட்சிக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படும் வரும் தேர்தலில் வாக்கு சரிவு ஏற்படும் என்கின்றனர் திருவள்ளூர் வடக்கு ஒன்றிய உடன்பிறப்புகள் மற்றும் நிர்வாகிகள்.

Udhayanidhi Stalin - Wikipedia

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி

இவரை மீறி யாராவது கேள்வி கேட்டால் மாவட்ட செயலாளர் என்னை மீறி ஒன்றும் செய்ய மாட்டார். ஏனென்று சொன்னால் கட்சி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் தன்னுடைய ஆர்.எம். கெஸ்ட் ஹவுஸில் தான் இலவசமாக நடத்த அனுமதிக்கிறார்.

 

எனவே மாவட்ட செயலாளர் எனக்கு எதிராக செயல்பட மாட்டார். அது தவிர கட்சி நிர்வாகிகள் அல்லது மூத்த உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் தம்பி உதயநிதி ஸ்டாலின் என்னுடைய பாக்கெட்டில் இருக்கிறார். திருவள்ளூரை பொறுத்தவரை நான் தான் ஆல் இன் ஆல். உங்களை உதயாவிடம் சொல்லி கட்டம் கட்டி விடுவேன் என்று மூத்த உறுப்பினர்களையே மிரட்டி வருகிறாராம், புஜ்ஜி ராமகிருஷ்ணன்.

உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் புஜ்ஜி ராமகிருஷ்ணனின் பாக்கெட்டில் தான் இருக்கிறாரா என்பதை அமைச்சர் உதயநிதி தான் தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கட்சி தலைமை உடனடியாக வேறு புதிய ஒன்றிய செயலாளரை நியமித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்கின்றனர் மூத்த உறுப்பினர்கள்.

ஆக மொத்தத்தில் புஜ்ஜி ராமகிருஷ்ணன் தாமரைப் பூவில் உதயசூரியனாய் ஒளிந்து கிடக்கிறாராம் என்று கிண்டல் அடிக்கின்றனர் உடன்பிறப்புகள். இந்த செய்தி குறித்து காரை விட்டு இறங்கி நடக்க முடியாத வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் தனது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!