திமுக அமைச்சர் சேகர்பாபு கொளத்தூர் பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்கிற ரவுடியை மிரட்டிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு.
இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு விடம் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கொளத்தூரை சேர்ந்த தன்ராஜ் என்பவர் அண்ணா வணக்கம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார் அப்போது எடுத்த எடுப்பிலேயே நீ யாராக இருந்தாலும் நேரில் வா என்று அமைச்சர் கோபமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது அந்த ஆடியோவில் நான் சிவப்பு சங்கர் விஷயம் உள்பட எல்லா விஷயத்தையும் சொல்லவா என்று அமைச்சரை மிரட்டும் விதமாக ரவுடி பேசியதும் அதற்கு அமைச்சர் சேகர்பாபு உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அவர் மிரட்டும் ஆடியோவும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.முதலமைச்சர்.
கொளத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் திமுக இளைஞரணி செயலாளர் மகேஷ் என்பவரின் ஆதரவாளரான தன்ராஜ் கொளத்தூர் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் மேலும் பலரையும் மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் தன்ராஜ் அமைச்சரிடம் பேசும் போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது அப்போது நேரில் வாருங்கள் என்று அமைச்சர் சொன்னதற்கு நீங்கள் போனில் பேச மாட்டீர்களா என்று தன்ராஜ் கேட்டபோது இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.
சவுக்கு சங்கர் விஷயத்தை ஊடகத்தில் வெளியிடுவேன் என ரவுடி தன்ராஜ் பேசியது தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது இதுகுறித்து அமைச்சர் போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் தன்ராஜு போனை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது தன்ராஜின் போனில் பல்வேறு ஆடியோக்கள் இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அமைச்சர் சேகர்பாபுவிற்கும் ரவுடி தன்ராஜுக்கும் என்ன தொடர்பு என்று போலீசார் விசாரணை நடத்த வேண்டும் அரசும் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற குரல் தற்போது எழுந்துள்ளது.வனத்துறை அமைச்சர் பொன்முடி.
வனத்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அநாகரீகமாக பேசி அவருடைய கட்சிப் பதவி பறிக்கப்பட்ட சில தினங்களில் சேகர்பாபுவின் செல்போன் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடி தன்ராஜின் செல்போனில் என்ன வகையான விஷயங்கள் ஆடியோக்கள் இருக்கிறது என்பதை திருச்சி சூர்யா தான் சொல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.