chennireporters.com

மின் ஒயர்களை திருடிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது.

மூன்று கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புள்ள அரசு மின் ஒயர்கள் டிரான்ஸ்பார்மர்கள் திருடிய திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் அவரது நண்பர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த செய்தி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் திமுகவினரிடையே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான மின் ஒயர்கள் டிரான்ஸ்பார்மர்கள் திருடப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது.  அதனை அடுத்து போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஒதிக்காடு அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் மற்றும் சரத், யானஸ், விக்னேஷ், குமரேசன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட இரும்பு, செம்பு, பித்தளை  அலுமினிய மின் ஒயர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.  அம்பத்தூர், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் இரும்பு கடைகளுக்கு இவர்கள் விற்றது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதேபோல அமைச்சர் ஆவடி நாசரிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.

இவர் இப்படி திருடிவிற்ற சம்பாதித்த பொருட்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பு அளவிற்கு திருவள்ளூர், ஈக்காடு சேவியர் ஆஸ்பிடல் பகுதியில் வீடு ஒன்று கட்டி வருகிறார். திருவள்ளூர்,பெரியபாளையம், ஈக்காடு, புல்லரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த அலெக்சாண்டர் மீது திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.  தற்போது அலெக்ஸ் கொள்ளையடித்த பணத்தில் ஈக்காடு கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள சேவியர் மருத்துவமனை அருகில் 47 லட்ச ரூபாய் மதிப்பில் இடம் வாங்கி வீடு கட்டி வருகிறார்.

புஜ்ஜி ராமகிருஷ்ணன்.

இவர் சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புள்ள மின் ஒயர்களை திருடியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  சுமார் கடந்த எட்டு வருடங்களாக அலெக்ஸ் இந்த திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் அந்த பகுதியில் உள்ள ஜிம் நடத்தும் ஒருவருடனும், காண்ட்ராக்டர் ஒருவருடனும் நல்ல நெருக்கமாக இருப்பதும் அவர்களிடம் இப்படி திருடி சம்பாதித்த பணத்தில் அவர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே அலெக்ஸ் மணல் கடத்தல் செய்யும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவருக்கு பக்க பலமாக திமுக ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் ஒன்றிய திமுக துனை சேர்மன் பர்கத்துல்லாகான்  ஆகிய இருவர் துனையாக இருப்பதால் கட்சி பணியிலும் திருட்டு தொழிலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.

இதையும் படிங்க.!