chennireporters.com

எடப்பாடியின் இதயம் தொட்ட அம்மா சிலை.

அதிமுகவில் நிலவி வந்த குழப்பங்கள் தீர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது இதை தமிழகம் முழுவதும் உள்ள எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி அறிவரசன் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து எடப்பாடி அவர்களின் அம்மா தவசி அம்மாள் திருவுருவச் சிலையை எடப்பாடி பழனிச்சாமிக்கு பரிசாக வழங்கினார்.

சிலையை பிரித்துப் பார்த்ததும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நிமிடம் ஆனந்த கண்ணீர் வடித்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் எடப்பாடிக்கு மலர் கொத்து, சால்வை, பேனா, தொப்பி என பல்வேறு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால் வழக்கறிஞர் அறிவரசன் ஏறக்குறைய ஒரு மாதமாக தயார் செய்யப்பட்ட தங்கம் முலாம் பூசப்பட்ட இரண்டு அடி சிலையை அதுவும் எடப்பாடியின் இதயம் தொட்ட அம்மாவின் சிலையை வழங்கியதும் அவர் நெகிழ்ந்து போனார். இதுவரை யாரும் தராத பரிசை தந்து இருக்கிறீர்கள் என்று வழக்கறிஞர் அறிவரசனை  பாராட்டினார்.

அம்மாவின் சிலையை கண்டதும் புத்துணர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி தன் அம்மாவின் சிலையை தன் அருகிலேயே வைத்துக் கொண்டாராம்.

ஏற்கனவே வழக்கறிஞர் அறிவரசன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முதன்முறையாக 5 அடி உயரமுள்ள வெள்ளியிலான செங்கோலை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் அலெக்ஸாண்டர் வழக்கறிஞர் சுருளி ராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் அம்மாவின்.

இதையும் படிங்க.!