chennireporters.com

ஈரோடு இடைத்தேர்தல் எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் அளிவிக்கப்பட்டுள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய நிலையில், அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகாவும், தேமுதிக சார்பாக ஆனந்தும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக சிவ பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அதிமுகவின் இபிஎஸ் அணி சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவார் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 65. 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றியுள்ளார்.

1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளரவும், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னரசு, , 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பணியாற்றியுள்ளார்.

 

இரண்டு முறை எம்எல்ஏ இதனையடுத்து 2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பு வகித்து வந்த அவரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2001 மற்றும் 2016-ம் ஆண்டு ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று தென்னரசு எம்.எல்.ஏ. ஆனார். இந்தநிலையில் தற்போது மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க.!