chennireporters.com

மருமகனை நான் தான் கொலை செய்வேன் சபதத்தை நிறை வேற்றிய மாமனார்.

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப்படுகொலை செய்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  தன் பேச்சை மீறி  தன் மகளை காதல் திருமணம் செய்த இளஞனை நான் தான் கொலை செய்வேன் என்று சபதம் எடுத்து அதை நிறைவேற்றியது செய்தி தற்போது  போலீஸ் விசாணையில் தெரியவந்துள்ளது உள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஜெகன் கூலித்தொழிலாளி இவர் அவதானப்பட்டி அடுத்த முழுக்கன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சங்கர் இவர் கிரானைட் வியாபாரம் செய்து வருபவர்.

இவருடைய கடையில் டைல்ஸ் மற்றும் கிரானைட் வாங்கி செல்பவர்களின் வீடுகளுக்கு போய் வேலை செய்து வந்தவர் ஜெகன் . இவர் சங்கர் நடத்தும் கடைக்கு வந்து போகும் போது  சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அதுவே காதலாக மாறியது.

இந்த செய்தி சங்கருக்கு தெரியவந்தது தன் மகளை காதலிக்க கூடாது என்றும் அவளை விட்டு விலகுமாறு ஜெகனிடம் சங்கர் கூறியுள்ளார். உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறைன் என் மகளை விட்டு விடுமாறு கூறியுள்ளார் சங்கர் இதை ஜெகன் ஏற்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரண்யாவை ஜெகன் காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சரண்யா தன் குடும்பத்தினருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கர் தன் மருமகன் ஜெகனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அது மட்டுமல்லாமல் அவனை நான் தான் கொலை செய்வேன் அதாவது அவன் கழுத்தை என் கையாலே நான் அறுப்பேன் என்று சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 21 ம் தேதி மதியம் தரும்புரி- கிருஷ்ணகிரி சாலை அருகே உள்ள அணைரோடு மேம்பாலம் அருகில் மோட்டார் பைக்கில் சென்ற போது ஜெகனை வழி மடக்கி சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து உதைத்தனர். அப்போது சிலர் ஜெகனின் கை மற்றும் கால்களை பிடித்துக்கொண்டனர். சரண்யாவின் அப்பா சங்கர் தான் வைத்திருந்த கத்தியால் ஜெகனின் கழுத்தை அறுத்தார்.

அப்போது அசிங்கமான அறுவருக்க தக்க வார்த்தைகளில் திட்டிக்கொண்டே வெட்டியதாக கூறப்படுகிறது. தான் போட்ட சபதத்தை நிறைவேற்றிய சந்தோஷத்தில் தனது உறவினர்களுடன் பைக்கில் ஏறி சென்று காவல் நிலையத்தில் சரண்டைந்தார் சங்கர்.

தன் மகள் வாழாவெட்டியானாலும், விதவையாக வாழ்ந்தாலும் பரவாயில்லை.  தன் தகுதிக்கு சமமில்லாத ஒருவனை மருமகனாக ஏற்க முடியாது என்ற ஆணவத்தின் உச்சத்தில் நடைபெற்ற கொலை தான் இது.   இது போன்ற மன நலம் உடையவர்களின் கும்பத்தில் உள்ளவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் மலங்களை சேகரித்து ஒன்றாக கரைத்து இவர்களின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை உடல் முழுக்க ஊற்றி” மலம் அபிஷேகம்” செய்யவேண்டும். அப்போது தான் இவர்கள் திருந்துவார்கள்.

இதையும் படிங்க.!