chennireporters.com

ஓசியில் பிரட் ஆம்லெட் சாப்பிட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்.

தமிழக காவல்துறையில் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் காக்கி சட்டையில் களவாணிகளும் ரவுடி மாமுல் கேட்டு மிரட்டி சம்பாதிக்கும் போலீசார் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ; தாம்பரம் அடுத்த படப்பையில் இரவு ரோந்து பணியின் போது டீக்கடையில் ஓசியில் ஜூஸ் பிரட் ஆம்லெட் சாப்பிட்ட பெண் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேரை பணி நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்  உத்தரவிட்டுள்ளார்.இந்த செய்தி தமிழக போலீசார் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. அவரது கார் ஓட்டுநர் ஜெயமாலா இரண்டு காவலர்கள் உள்பட நான்கு பேர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் படப்பையில் உள்ள ஒரு டீ ஷாப்பில் வண்டியை நிறுத்திவிட்டு ஜூஸ் மற்றும் பிரட் ஆம்லெட் டீ ஆர்டர் கொடுத்தனர். கடைக்காரரும் அவர்களுக்கு கேட்ட பொருளை கொடுத்துள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் ஓனர் எங்கே அவரை வந்து என்னை பார்க்க சொல்லு மாதா மாதம் எதுவும் கவனிப்பதில்லை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். என்று கடை ஊழியரை மிரட்டி பணம் தராமல் இன்ஸ்பெக்டர் தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லி கிளம்பி  இருக்கிறார்.இந்த நிலையில் கடை உரிமையாளர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களுக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ஜெயமாலா, இரண்டு காவலர் என மொத்தம்  நான்கு பேரை பணியை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அது தவிர இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஏற்கனவே  சோழிங்க நல்லூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. காக்கி சட்டை அணிந்து கொண்டு ரவுடி மாமுல் கேட்டு மிரட்டும் போலீஸ்சாரை பொதுமக்கள் அடித்து உதைத்தால்தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்கள் பொது மக்கள்.  அது தவிர இப்படி மிரட்டி ஓசியில் சாப்பிடுவதற்கு பதிலாக வேறு ஏதாவது தொழில் செய்து கூட சாப்பிடலாம் என்று பொதுமக்கள்  சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள். 

ஓசியில் மாமுல் கேட்டு வசூல் செய்யும் போலீசார் பெரும்பாலும் ரோந்து வாகனங்களில் பணிபுரியும் காவலர்களே வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக இவர்கள் தெருவோரக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பிரியாணி கடைகள், டீக்கடைகள் போன்ற பகுதியில் கடை நடத்தும் ஊழியர்களிடமே மிரட்டி வசூல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

என்றைக்குத்தான் இப்படி ஓசியில் பிச்சை எடுத்து சாப்பிடும் பழக்கத்தை தமிழக போலீசார் கைவிட போகிறார்களோ தெரியவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.

இதையும் படிங்க.!