chennireporters.com

ஜனாதிபதியானா முதல் பழங்குடியின பெண். திரௌபதி முர்மூ.

திருமதி. திரெளபதி முர்மு

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக ஒரு பழங்குடியின பெண்.  இந்தியாவின் உச்சப் பதவியான ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   இந்த செய்தி உலகம் முழுவதும் பாராட்டை பெற்றுள்ளது.

ஒடிஸா மாநிலம் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா என்ற மலை  கிராமத்தில் சந்தாலி என்னும்  மலைசாதி குடும்பத்தில் பைரஞ்சி நாராயண் துது என்ற விவசாயின் மகளாக 20.06.1958 அன்று பிறந்தார்.

திரௌபதி முர்மு உள்ளூரில் ஆரம்பகல்வி பயின்ற அவர் ராமதேவி பெண்கள் கல்லூரியில்  1979 ஆம் ஆண்டு பி.ஏ.பட்டம் பெற்றார்.  மாநில அரசு தலைமை செயலகத்தில் இளநிலை உதவியளராக தன் வாழ்க்கையை துவக்கினார்.

2015 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநில ஆளுநனராக நியமிக்கப்பட்டு 2021வரை சிறப்பாகப் பணியாற்றினார்.

58 வயது வரை அவருக்கு சொந்தமாக வீடு கிடையாது.  வாழ்நாள் முழுவதும் பின் தங்கிய சமுதாய மக்கள் மேம்பாட்டிற்காக உழைத்தவர். தினமும் யோகாவும், தியானமும் தவறாமல் பயிற்சி செய்பவர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபின் ஒரு மலை சாதியினரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ, குடியரசுத்தலைவராகவோ பொறுப்பேற்றதில்லை. இதுவே முதல் முறை.

முதல் மலைசாதி சமுதாயத்தைச் சார்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலை சந்திதார். மொத்தம் (எம்.பி,  எம்.எல்.ஏ, அந்தந்த மாநிலமக்கள் தொகை நிலவரப்படி) 10,86,431 பேர் வாக்களித்தார்கள் அதிகவாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றார்..

நமது சார்பாக நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரின் பணிசிறக்க வாழ்த்துகள். தொடரட்டும் அவரின் சிறப்பான பணி…

இதையும் படிங்க.!