chennireporters.com

கெட் அவுட் ரவி தமிழக ஆளுநருக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆளுநர் யார் என்று ரவிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என திமுக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. சனாதனத்திற்கு திராவிடத்தின் மீது எப்போதுமே ஒவ்வாமை தான் என்றும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் திமுகவினர் அனல் பறக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்.

இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை” என திமுக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. ஆளுநர் பதவியில் தொடர ஆர்.என்.ரவிக்கு தகுதியில்லை என்றும், அவர் முழு நேர ஆர்எஸ்எஸ் பணிகளையே மேற்கொள்ளலாம். சனாதனத்திற்கு திராவிடத்தின் மீது எப்போதுமே ஒவ்வாமை தான்! என்பதுபோன்ற கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளராக ராமகிருஷ்ணன், காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் வேல்முருகன் என அனைத்து தரப்பினரும் ஆளுநருக்கு எதிராக கெட் அவுட் ரவி என்கிற வாசகத்தை முன்மொழியும் வகையில் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க.!