chennireporters.com

இந்தியாவை உளவு பார்க்க வந்துள்ளதா சீனா போர்க்கப்பல்?

இலங்கைக்கு வந்த சீனா உளவு கப்பல் குறித்து நாம் யாரும் நாம் அக்கறை காட்டவில்லை. ஆட்சியாளர்களுக்கும் இது தெரியவில்லை.

 ஹம்பாந்தோட்டா

அண்டை நாடான இலங்கைக்கு சீனாவின் யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் ஆகஸ்ட் 11-லிருந்து 17 வரை ஹம்பாந்தோட்டா துறைமுகம் மட்டுமல்ல இந்து மகா கடல் கேந்திர பகுதியிலும் இருக்கின்றது. இது கிட்டத்தட்ட இந்தியாவை உளவு பார்க்க மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல.

நம்மைப் பொருத்தவரை தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி விமான நிலையம்,கூடங்குளம் அணு மின் சக்தி நிலையம், நாங்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பாதுகாப்பு தளம், மகேந்திர கிரியில் உள்ள ஹெவி வாட்டர் ப்ராஜெக்ட், கல்பாக்கம் அணு மின் சக்தி நிலையம், ,மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம் மீன் பிடி துறைமுகம், கடலூர் துறைமுகம், கிருஷ்ண பட்டிணம், ஸ்ரீஹரிகோட்டா, விசாகப்பட்டிணம் என பல கேந்திர பகுதிகள்;
மேற்கு முகமாக கேரளத்தில் தும்பா, கொச்சி துறைமுகம், கன்டலா, மங்களூர், ஏன் பம்பாய் முதல் இமயமலை வரை கூட உளவு பார்க்க முடியும்.

இது புவியரசிற்கு நல்லதல்ல. இதுபற்றி எவரும் வாய் திறந்து பேசுவதும் கிடையாது. அரசியல் துறைகளில் அன்றைக்குரிய விஷயங்களை மட்டுமே பேசி செல்கிற வெறும் வார்த்தை ஜால அளவில்தான் நாம் இருக்கின்றோம் என்பது வேதனைப்படுத்துகிறது.

அரசியல் என்பது ஒரு ஆழ்ந்த கவனிப்பும் புரிதலும் வேண்டும். அது மட்டுமல்ல, மனப்பூர்வமாக அரசியலில் பணி செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை இல்லாததால் இதைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் மனம் வரவில்லை. என்ன செய்ய? இது தான் இன்றைய நிலை.

இந்தக் கப்பலில் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய பாலிஷ்டிக் ஏவுகணைகளை ஏவுவதற்கு ஏற்ப வசதிகள் எல்லாம் உள்ளன. விண்வெளி மட்டும் சேர்க்கை கோள்கள் உளவு பார்க்கவும் கடல் ஆழத்தை பார்க்கவும் நீர் மூழ்கி கப்பல்கள் எங்கெல்லாம் இருக்கின்றன உள்ளிட்டவற்றை உளவு பார்க்கும் இந்த யுவான் வாங் கப்பல் மூலமாக அறிய முடியும்.

இந்த சீன உளவு கப்பல் 728 அடி நீளமும் 85 அடி அகலமும் உடையது. சீனாவில் லாங் மார்ச் என்ற ராக்கெட்டை ஏவ இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டது. அப்படி ஒரு வீரியமான சக்தி மிக்க கப்பல் இங்கு வர வேண்டிய அவசியம் என்ன என்பதை நாம் இதைப் பற்றி சிந்திப்பதற்கு கூட தயாராக இல்லை என்பதை வேதனைக்குரிய விஷயம்.

இதையும் படிங்க.!