ஆந்திரா மாநிலம் சித்தூரில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் மான் தோல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலின் நிர்வாகத்துக்கு சொந்தமானது வரதராஜ சுவாமி கோயில் இந்தக் கோயில் பூசாரி வீட்டில் மான் தோல் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரதராஜ சுவாமி கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தில் முறைகேடு நடப்பதாகவும் அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படும். அரிசி,பருப்பு, எண்ணெய் பொருட்களை அர்ச்சகர்கள் திருடிச்செல்வதாக புகார் எழுந்தது.
அதனை தொடர்ந்து அங்கு பணிபுரியும் சில ஊழியர்கள் வீட்டில் சோதனை நடத்த கோயில் நிர்வாகமும் காவல்துறையினர் முடிவு செய்தனர். இது அடிப்படையில் போலீசார் மற்றும் செயல் அலுவலர் வெங்கடேசன் இணைந்து கோயில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அதில் இரண்டு சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு எண்ணெய், புளி ஆகிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமோகன் வீட்டில் ஆய்வு செய்தபோது மான் தோல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வீட்டில் இன்னும் பல மான் தோல் இருப்பதாக போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மான் கறி மாமிசம் சாப்பிட்டாரா ஐயர் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் வீட்டில் மான் தோல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கிருஷ்ணமோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணமோகனனுக்கும் அங்குள்ள வேட்டைகாரர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் மற்றும் மான்,யானை தந்தங்கள் செம்மரங்கள் போன்ற கடத்தல் காரர்களுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று ஆந்திர போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.