chennireporters.com

# idol cbi case; பொன் மாணிக்கவேல் தினமும் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் கோர்ட் அதிரடி உத்தரவு.

சிலை கடத்தல் வழக்கில் பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தினந்தோறும் நடத்தப்படும் விசாரணைக்கு  ஒரு மாத காலம் நேரில்  ஆஜராகி கையெழுத்திடவேண்டும்  என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவு | Strict action against sexual crimes in schools High  Court ...

விருதுநகர் மாவட்டம் ஆலடிப்பட்டி என்ற கிராமத்தில் 2008 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய போது ஆறு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன இந்த சிலைகளை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காதர் பாட்ஷா தலைமையிலான போலீசார் பறிமுதல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சர்வதேச சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர், தீனதயாளன் ஆகியோரிடம் விற்பனை செய்து விட்டதாக கடந்த 2017 ஆம் ஆண்டு காதர் பாட்ஷா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. அப்போது காதர் பாட்ஷா திருவள்ளூர் மாவட்ட  நில மோசடிப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். மேலும் அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரி ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் டிஎஸ்பி காதர் பாட்சாவை  கைது செய்து சிறையில் அடைத்தார்.

 

பொன்.மாணிக்கவேல் முன்ஜாமின் வழக்கு - நீதிமன்றம் இன்று தீர்ப்பு – News18  தமிழ்

பின்னர் இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த காதர் பாட்சா சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு ஐஜி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் காரர் தீனதயாளனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கில் தன்னை கைது செய்துள்ளார்.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதில் காதர் பாட்ஷா தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட  உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பொன்மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு – today news in tamil |  daily news tamil | தமிழ் நியூஸ்

இந்த நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொன்மாணிக்கவேல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இந்த வழக்கில் அவரை கைது செய்து விசாரித்தால் தான் பல உண்மைகள் தெரியவரும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

Ig Pon Manickavel News, Photos & Videos in Tamil - News18 தமிழ்நாடு

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது பொன்மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மேலும் 4 வாரங்களுக்கு தினம் தோறும் சிபிஐ அலுவலகத்திற்கு பொன்மாணிக்கவேல் விசாரணைக்குச் நேரில் செல்ல வேண்டுமென்றும் அங்கு தினமும் அவர் கையெழுத்து இடவேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சிபிஐ தரப்பில் அதிகாரிகள் பல உண்மைகளை மறைப்பதற்காகவே விசாரணையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று முன் ஜாமின் கேட்டு பொன் மாணிக்கவேல் மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. ஆனால் தினமும் எங்களுடைய விசாரணைக்கு வந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் எங்களுடைய அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஏறக்குறைய முன் ஜாமின் வழங்கப்படாத உத்தரவு போல தான் இருக்கிறது அதாவது சிபிஐ கைது செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை போலத்தான் இருக்கிறது என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்.

பொதுவாக சிபிஐ அரசியல் காழ்ப்புணர்ச்சி தொடர்பான வழக்குகளை தவிர கைது நடவடிக்கையில் இறங்காது. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சிபிஐ குறியாக இருக்கும். அதன் அடிப்படையிலேயே நாங்கள் எங்கள் இலக்காக நீதிமன்றத்தில் முன் வைத்தது நடந்து விட்டது. அவரை விசாரணைக்கு ஒத்துழைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்திருந்தோம் அதன்படியே அவரை விசாரணைக்கு சென்று ஒத்துழைப்புத் தருமாறும் தினமும் எங்கள் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்.

 

பொன்மாணிக்கவேல் பாணியில் சிலை கடத்தல்  வழக்கை சிபிஐ விசாரிக்க மாட்டார்கள் என்பது பொன்மாணிக்கவேலுக்கு நன்றாக தெரியும். சிபிஐ அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கில் டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது போடப்பட்டதே உள்நோக்கம் கொண்ட பொய்யான வழக்கு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது எனவே பொன்மாணிக்கவேல் வாயை கொடுத்து  வசமாக  மாட்டிக் கொண்டார் என்கின்றனர் காதர் பாட்ஷா தரப்பு வழக்கறிஞர்கள்.

இதையும் படிங்க.!