chennireporters.com

ஆரூத்ரா நிறுவனம் சென்னையில் சிக்கப்போகும் முக்கிய வி.ஐ.பிகள்.

பொது மக்களிடம் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்த ஆருத்ரா நிறுவனத்துடன் தொடர்புடைய சினிமா தயாரிப்பாளர் வீட்டில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

 

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காஞ்சிபுரத்த சேர்ந்த பிரபல நிதி நிறுவனம் மற்றும்  வெற்றி ஐஏஎஸ் அகாடமி , ஒயிட் ரோஸ் என்ற புதிய தமிழ்  படத்தின் நடிகர், தயாரிப்பாளர் என பல நிறுவனங்களை நடத்தி வரும்  ரூசோ ரஞ்சித் என்பவரது  வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆருத்ரா நிதி நிறுவன மேலாளர் ராஜசேகரை விடிவிக்க  வைப்பதாக கூறி 18 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும் பொது மக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்துடன் இணைந்து பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று சொல்லப்பட்ட புகார் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

தற்போது சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வருகிறது.  சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சில வழக்கறிஞர்களிடம் ரஞ்சித் பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் பல போலீஸ் அதிகாரிகளை சென்னையில் உள்ள  முக்கிய ஹோட்டல்களில் சந்தித்து ஆருத்ரா நிறுவனத்து உதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் ரஞ்சித்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரஞ்சித்தின் நான்கு செல்போன்களை ஆய்வு செய்து வருகின்றனர்.  மேலும் அவருடைய சமூக வலைதல கணக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.  இதில் பல அரசியல் முக்கிய தலைகள் சிக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க.!