chennireporters.com

ஜெயலலிதா மரணம் . ஆறுமுகசாமி ஆணைய செலவு நான்கு கோடி.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.ஆணையத்தின் அறிக்கை இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆறுமுகம் சாமி ஆணையத்திற்கு செலவிடப்பட்ட தொகைகள் குறித்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுவரை ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிப்பதற்கு அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு செலவிடப்பட்ட தொகைகள் எவ்வளவு என்பதை சமூக ஆர்வலர்கள்  நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.  அதன் அடிப்படையில் சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு மட்டும்,
2017-2018 ஆண்டில் 30,05,000 ரூபாயும்
2018-2019 ஆண்டில் 83,06,000 ரூபாயும்
2019-2020 ஆண்டில் 1,08,31,000 ரூபாயும்
2020-2021 ஆண்டில் 1,03,25,000 ரூபாயும்
2021-2022 ஆண்டில் 1,04,53,000 ரூபாயும்
2021-2022 ஆண்டில் 51,92,000 ரூபாயும் செலவிட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் மொத்தமாக 4 கோடியே 81 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க.!