கோவை ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் சாலையை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது சித்தி கார்த்திகாயினி. இந்த இடத்தில் தனுஷ்கோடி என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடம் உள்ளது. அதன் பக்கத்தில் இரண்டு பக்கங்களிலும் நிறைய வீடுகள் உள்ளன.
அதற்கு முன்பாக இரண்டு முறை ஜேசிபி எடுத்துச் சென்ற தனுஷ்கோடியிடம் பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் கவனமாக இடியுங்கள் அருகில் நிறைய வீடுகள் உள்ளன என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ஒன்றும் ஆகாது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கடந்த மூன்றாம் தேதி மதியம் தனுஷ்கோடிக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை ஜேசிபி வைத்து இடித்தனர் அப்போது சரவணகுமார் என்பவரது வீட்டில் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்த அவரது சித்தி கார்த்திகாயினி என்பவர் மீது தனுஷ்கோடியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரவணகுமார் ஓடிவந்து தனது சித்தியை தூக்கும் பொழுது மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் 108 அவசர ஊர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாற்றியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். இது குறித்து தனுஷ்கோடியிடம் பாதுகாப்பாக இடியுங்கள் என்று பலமுறை சொல்லியும் இப்படி கவன குறைவாக இருந்து எனது சித்தியை கொன்று விட்டீர்களே என்று கேட்டதற்கு அவர் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
ஜேசிபி டிரைவர் ராபட்டும் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் விபத்து வழக்காக இல்லாமல் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் சுவரை இடிக்கும் போது பிறருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காத வகையில் பணியை செய்ய வேண்டும். அது தவிர அரசு அதிகாரிகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் கட்டிடத்தை இடித்துள்ளனர்.
எனவே பி.என்.எஸ் ஆக்ட் 105 ன் படி வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட கார்த்தியாயினி குடும்பத்தினர்.இந்த வழக்கில் ஜேசிபி டிரைவர் மற்றும் நிலத்தின் உரிமையாளரை காப்பாற்றும் வகையில் இரத்தினபுரி போலீசார் செயல்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டை வைக்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த நிலையில் வழக்கறிஞர் சௌந்தரராஜன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று வழக்கின் உண்மை தன்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிமிடம் வரை ரத்தினபுரி போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர் என்பது அவரது நடவடிக்கைகளில் தெளிவாக தெரிகிறது.