chennireporters.com

கல்லா கட்டும் “ சப்-இன்ஸ்பெக்டர் ரைட்டர் ”கூட்டணி. `

திருவள்ளூர் அடுத்த கனகம்மா சத்திரம்  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர்  கல்லா கட்டும் இருவர் கூட்டணி பற்றி டிஐஜிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளில் குட்கா, புகையிலை ஆன்ட்ஸ், பான்பராக், துளிப்  போன்ற போதைப் பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லா விதமான சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மாவட்டத்தில் உள்ள புல்லரம்பாக்கம் காவல் நிலையம், திருவலாங்காடு காவல் நிலையம், கனகம்மாசத்திரம், மப்பேடு, கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, ஆர் கே பேட்டை, பள்ளிப்பட்டு போன்ற காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

திருவலாங்காடு காவல்நிலத்தில் எல்லைக்குட்பட்ட மணவூர் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் குமாரி என்கிற மூதாட்டியை கொலை செய்த சம்பவமும் நடந்தேறி உள்ளது.  அந்த கொலையை  வயது மூப்பின் காரணமாக இருந்துவிட்டார் என்று போலீசார் மூடி மறைத்து விட்டனர்.

இதுபோன்ற செயல்கள் மாவட்ட முழுவதும் உள்ள  காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணையன். ரைட்டராக பணியாற்றி வருபவர் ரூக் மாங்கதன் இந்த இருவர் கூட்டணி தான் தற்போது திருத்தணி சப் டிவிஷனில் பிரச்சினை இல்லாமல் அதிகம் கல்லாக்கட்டும் கூட்டணி  பெயர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதாவது கனகம்மாசத்திரம் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் போதை பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. அனைத்து கடைகளுக்கும் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கண்ணய்யன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உங்களை அனைவரையும் போதை பொருட்களை விற்க அனுமதி கொடுத்து விட்டார்.            ”வாரம் ஒன்றுக்கு ஒரு கடைக்கு தலா 200 ரூபாய் தர வேண்டும்” என்று கண்ணையா  மற்றும்ரைட்டர் புக்மாங்கதன் கூட்டணி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இது தவிர கனகம்மா சத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இதே வசூல் வேட்டை நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் சாராயமும் பல பகுதிகளில் பிராந்திகளும் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடி தடி வழக்குகளில்  நிபந்தனை ஜாமின் பெற்று வந்து காவல் நிலையத்தில் கையெழுத்து போட வரும் நபர்களை ரைட்டர் ருக்மாங்கதன் நேரில் அழைத்து நீங்கள் தினமும் வந்து கையெழுத்துப் போடத் தேவையில்லை. வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வந்து கையெழுத்து போட்டால் போதும் வழக்குக்கு ஏற்றதைப் போல ஒரு கணிசமான தொகையை பாக்கெட் செலவுக்காக வாங்கிக் கொள்ளுகிறார்.

அது தவிர ஆந்திரா பகுதியை ஒட்டியுள்ள நகரம் கனகம்மாசத்திரம் என்பதால் குடிபோதையில் வாகனம் ஓட்டி வரும் நபர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். சப்இன்ஸ்பெக்டர் கண்ணையன் வைத்துள்ள மோட்டார் பைக் TN 73 .S. 4357 என்ற மோட்டார் பைக் இன்சூரன்ஸ் இல்லாமல்  கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓட்டி வருகிறார். ஆனால் இவர் நாள் ஒன்றுக்கு இன்சூரன்ஸ் இல்லாமல் பைக் ஒட்டி வரும் நபர்களிடம் பல பேரிடம் அபராத தொகை என்று அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சண்டை தொடர்பாக வரும் புகார்கள் குறித்து  பாதிக்கப்பட்டவர்கள் எழுதி கொண்டு வரும் புகாரை சப் இன்ஸ்பெக்டர் கண்ணய்யா ஏற்க மாட்டார். அவருக்கு வசதியாக அவர் சொல்லுவதைப் போல எழுதி தர சொல்லுவார் இல்லையென்றால்  புகாரை வாங்கமாட்டார். அவரே எழுதி கையெழுத்து போட வைப்பார் . பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகாரை எதிர்த்தரப்பினருக்கு செல்போன் மூலம் பேசி உருட், உருட்டு என உருட்டி கொஞ்சம் கல்லா கட்டி விடுவார்.

சில நேரங்களில் இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு போட்டு ஒன்றும் தெரியாததைப் போல  தன்னை காட்டிக் கொள்வார் கண்ணையா.  கண்ணையா, ரைட்டர் ருக்மாங்கதன் கூட்டணி பிடிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக மனசாட்சிக்கு விரோதமாக நீதிக்கு எதிராக செயல்படுவதால் அங்கு பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர்  விஷ்ணு என்பவர் இந்த காவல் நிலையம் தனக்கு வேண்டாம் என்று தானாகவே வேறு ஒரு காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் வாங்கி சென்று விட்டார்.

மனிதாபிமானம் இல்லாமல் சட்டத்தையும் மதிக்காமல் பணம் பணம் என்று பண பைத்தியம் பிடித்து அலையும் கண்ணையாவையும் ருக்குமாங்கதனையும் தண்டிப்பாரா எஸ்.பி?  எல்லாத்துக்கும் காரணமாய் இருக்கும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அனைத்தையும் கண்டும் காணாமல் போய்விடுவார்.

 

கனகம்மாசத்திரம் பழைய காவலர் குடியிருப்பு அருகில் தினமும் ஒரு சண்டை கஞ்சா அடி தடி நாள் தோறும்  நடைபெற்று வருகிறது. அதை தடுக்காத இவர்கள் ஆந்திரா  மாநிலம் மங்கலத்தில் இருந்து வரும் சாராயத்தை நெமிலி, பனப்பாக்கம் ,என்.என். கண்டிகை வழியாக கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உள்ளே வந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதற்கான எல்லா வசுலையும் சப் இன்ஸ்பெக்டர் கண்ணையாவே பார்த்துக் கொள்ளுகிறார். அது தவிர வழக்கறிஞர்களோடு யாராவது புகார் கொடுக்க  காவல் நிலையம் வந்தால் புகார் கொடுக்க வந்தவர்களை தனியாக அழைத்து வக்கீலை அனுப்பி விடுங்கள் வக்கீலுக்கு தரும் பணத்தை எங்களிடம் கொடுங்கள் நாங்களே உங்கள் பிரச்சினையை சரி செய்து தருகிறோம் என்கிறார் கண்ணையா.

திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த காவல் நிலையத்தில் காவலர்கள் தவறு செய்தாலும் அதை பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டி மாவட்ட கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாண் அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்தால் அது குறித்து தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களை கண்டித்து வைப்பதாகவும் பத்திரிகையாளர்களுக்கு பதில் தருவார். அப்படி தனது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்று கடமை உணர்வுடன் பணியாற்றும் எஸ்பியின் செயலை பாழ் படுத்தும் விதமாக பணியாற்றி வருகிறார்கள் இது போன்ற சில காவல்துறையினர்.  எஸ்பியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுப்பார் எஸ்.பி. என்பதை அறியாமல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.

சில தினங்களுக்கு முன்பு ஆற்காடு குப்பம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை ஒருவர் அடித்து விட்டதாக புகார் கொடுக்க வந்தார். அவர் வழக்கறிஞர் குணசேகரன் என்பவர் மூலமாக புகார் கொடுக்க காவல் நிலையம்  சென்றார்.

புகார் கொடுக்க வந்த பெண்ணை வழக்கறிஞர் தேவையில்லை அவரை அனுப்பி விடுங்கள் என்று புகார் கொடுக்க வந்த பெண்ணை மிரட்டி வழக்கறிஞரை திருப்பி அனுப்பி வைத்து விட்டார் கண்ணையா. அது தவிர வழக்கறிஞர்கள் யாரும் காவல் நிலையத்திற்கு வந்தால் மரியாதையுடன் பேசி வழக்கு தொடர்பான விவரங்களை சொல்லவே மாட்டார் சப் இன்ஸ்பெக்டர் கண்ணையா.  கட்டிங், செட்டிங், கமிஷன் என்றால் அது கனகம்மா சத்திரம் போலீஸ் தான் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

இதையும் படிங்க.!