chennireporters.com

கர்நாடகத் தமிழ் அமைப்புகளின் முகவரி கையேடு.

கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு,கோலார்தங்கவயல், ஹுப்பள்ளி, பெல்லாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், பொது அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன.

மொழி, கலை(இலக்கியம், இசை, நாடகம், திரைப்படம்), பண்பாடு, அரசியல், சமயம், விளையாட்டு, சமூகப்பணி, தொழில், கல்வி, நூலகம், ஊடகம், மருத்துவம் போன்ற பல்வேறு தளங்களில் அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஆனால், அவற்றை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்புகள் இல்லாததால், தமிழர்களின் நிறுவனங்களை அணுக தமிழர்களால் முடியாத சூழ்நிலை உள்ளது.

   முத்துமணி நன்னன் செயலாளர் 

பெங்களூர் பத்திரிகையாளர்கள் சங்கம்.

தமிழர்களின் சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த குறையை போக்கும் வகையில் கர்நாடகத்தில் எல்லா தளங்களிலும் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்விக் கூடங்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கர்நாடகத் தமிழ் அமைப்புகளின் முகவரி கையேடு ஒன்றை வெளியிட கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

 

எனவே, தமிழர்களால் தொடங்கப்பட்ட தமிழ் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், பொது அமைப்புகள், மையங்கள், நூலகங்கள், படிப்பகங்கள் உள்ளிட்ட எல்லா தரப்பினரும் அமைப்பு/நிறுவனப் பெயர், நிறுவனர்/தலைவர்/நிர்வாகிகள், தொடங்கிய ஆண்டு, முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல், இணையதளம் போன்ற விவரங்களை அக்.30-ஆம் தேதிக்குள் [email protected] என்ற‌ மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிங்க.!