chennireporters.com

ஜோடிகளை மாற்றி உல்லாசம் அதிர்ச்சியை ஏற்படுத்திய  கேரளா.

கேரள மாநிலம் திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் மற்ற ஆண்களுடன்  உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில்  மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதனைத்தொடர்ந்து ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முகநூல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குழுவை ரகசியமாக தொடங்கி அந்த குழுவுக்கு ‘கப்பிள்ஸ் மீட்’ என்று பெயரிட்டுள்ளது தெரியவந்தது.

இந்த குழுவில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் தங்களது விருப்பத்துடனும், கட்டாயத்தின் பேரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள். சிலநேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலும், உல்லாச விடுதிகளிலும் சந்தித்து மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பதும் உண்டு.

சில நேரங்களில் ஒரு பெண் பல ஆண்களின் ஆசைக்கும், ஒரு ஆண் பல பெண்களின் ஆசைக்கும் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு பல அதிர்ச்சி தரும் தகவல்கள்
கிடைத்துள்ளது. மனைவிகளை உல்லாசத்திற்கு மாற்றிக்கொள்ளும் கும்பலுடன் தொடர்புடைய 14 சமூகவலைத்தள குழுக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில், கேரளா மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இதுபோன்ற ஒவ்வொரு சமூக ஊடகக் குழுவிலும் சராசரியாக 2,000 தம்பதிகள் உறுப்பினர்களாக  உள்ளனர்.

சாதாரண மன நிலையோடு இருப்பவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் நிலைக்கு வர மாட்டார்கள். ஆதலால், இந்த கும்பல் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறதா? என்பது குறித்தும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு   ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய புள்ளியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறதாம்  கேரளா காவல் துறை. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிக்கப்போகும் முக்கிய தலைகள் யார் யார் என்ற பேச்சு கேரளா காவல் துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.!