chennireporters.com

லஞ்சப் பணத்தில் வாழ்க்கை நடத்தும் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி.

பட்டாவில்  பெயர் நீக்க செய்ய பணம் கொடுத்தால் மட்டும்தான் வேலை நடக்கும் என்று பாதிக்கப்பட்ட நபரிடம் பணம் கேட்டு நச்சரித்த கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பற்றி தமிழக முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த செய்தி தற்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நடுக்காட்டுத்தோட்டம் வடக்கு மூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் தனக்கு சொந்தமான இடத்தின் பட்டாவில் பெயர் நீக்கல் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பித்தின் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அது தொடர்பாக முருகேசன் கடந்த  நவம்பர் மாதம் 8ம் தேதி மதியம் கொடுமுடி தாலுகா ஆபிஸ் சென்று தாசில்தார் மாசிலாமணியை நேரில் சந்தித்து தான் கொடுத்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டிருக்கிறார்.

                                                                               முருகேசன்.

ஆனால் தாசில்தார் மாசிலாமணி உங்களுடைய வேலை முடித்து தர வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று தாசில்தார் மாசிலாமணி நேரடியாகவே முருகேசன் இடம் கேட்டுள்ளார்.

அதற்கு முருகேசன் நான் மிகவும் வறுமை நிலையில் இருக்கிறேன் என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறி இருக்கிறார் .அதற்கு தாசில்தார் மாசிலாமணி என்னையா நீ உன் கதை காளை மாட்டில் பால் கறக்கும் கதையாக இருக்கிறது. நாங்கள் ஒன்றும் தர்மத்திற்கே சேவை செய்ய வரவில்லை பணமில்லாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என்ன முதல்வரே சொன்னாலும் கூட உன் விண்ணப்பத்தை பரிசளிக்க மாட்டேன்.

அது தவிர உன் பேரை சொல்லி யாராவது சிபாரிசு செய்ய சொன்னால் உன்னை தொலைத்து கட்டி விடுவேன் என்று கூறி பணம் கொடுக்க வசதி இல்லாத உனக்கு எதுக்கு இந்த வேலை ஏன் உன் அப்பனும் ,பாட்டனும் வச்சிருந்த மாறியே நீயும் போக வேண்டியது தானே என்று இன்னும் சொல்ல முடியாத அசிங்கமான நாக்கூசும் கெட்ட வார்த்தைகளால் தாசில்தார் மாசிலாமணி முருகேசனை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவமானப்பட்டு அழுது கொண்டே தாலுகா ஆபீசில் இருந்து வெளியேறிய முருகேசன் தாசில்தார் மாசிலாமணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்டிஓ ,டிஆர்ஓ ,கலெக்டர், தமிழக முதல்வர், லஞ்ச ஒழிப்புத்துறை   அனைத்திற்கும் நவம்பர் மாதம் 10ம் தேதி புகார் அனுப்பியுள்ளார்.

அந்த புகார் குறித்து இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .ஆர்டிஓ விசாரணைக்கு வரச் சொல்லி கடிதம் அனுப்பி இருக்கிறார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள புகார் ஏற்கப்பட்டுள்ளது .அந்த புகார் குறித்து நாங்கள் ஒன்றும் நடவடிக்கை எடுக்க முடியாது.  இந்த புகாரை ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கிறோம் அவர் உங்கள் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

                                                                        மாவட்ட ஆட்சியர் .

கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பணமில்லாமல் எந்த வேலையும் செய்து தர மாட்டார் என்றும் பச்சை மையில் கையெழுத்து போடும் வேலை மிகவும் பெரியது ஒவ்வொரு கையெழுத்திற்கும் ஒரு விலை இருக்கிறது என்று அலுவலக ஊழியர்களிடம் மார்தட்டி சொல்லுகிறாராம்

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் ராசாம்பாளையம் அருகே உள்ள தேவிகி அம்மாபுரம் கதவு எண் 22 என்ற முகவரியை சார்ந்த ராஜலிங்கம் என்பவர் ஜனவரி மாதம் பத்தாம் தேதி ஒரு புகாரை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ளார்.  அதில் எனது மாமனார் முத்துசாமி, மாமியார் பொங்கி அம்மாள் இறந்து விட்டார்கள் அவர்களுக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு நான் விண்ணப்பித்திருந்தேன்.

தாசில்தார் மாசிலாமணியை வந்து சந்திக்கும்படி தாலுகா ஆபீசிலிருந்து தகவல் சொன்னார்கள். நான் நேரில் சென்று தாசில்தார் மாசிலாமணியை சந்தித்தேன்.  அப்போது தாசில்தார் மாசிலாமணி நீங்கள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பத்தில் நிறைய கோளாறுகள் இருக்கிறது. 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் அளிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

தாசில்தார் மாசிலாமணி.

இவரும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக தாசில்தார் மாசிலாமணி இடமே நேரடியாகவே கையில் கொடுத்திருக்கிறார்.  இருப்பினும் வேலை இன்னும் முடித்து தரவில்லை இது தொடர்பாக ஆர்டிஓ லஞ்ச ஒழிப்புத்துறை என பல அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ஆர்.டி.ஒ சதீஷ்குமார் அவர்கள் கடந்த 19ஆம் தேதி நேரில் அலுவலகம் அழைத்து விசாரணை செய்து ராஜலிங்கத்தின் மாமனார் முத்துசாமி என்பவருக்கு வாரிசு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் இன்னும் பொங்கி அம்மாளுக்கு வாரிசு சான்றிதழை வழங்கவில்லை.

அந்த சான்றிதழ் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக இவர் அனுப்பிய கடிதத்தால் கோபமடைந்த கொடுமுடி தாலுகா அலுவலக ஊழியர்கள் ராஜலிங்கத்திற்கு இன்னும் வழங்க வேண்டிய தனது மாமியார் பொங்கி அம்மாளின் வாரிசு சான்றிதழ் வழங்காமல் இருக்கிறார்கள்.

கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பற்றி நாம் நேரடியாக சென்று விசாரித்தோம். அவருக்கு பல புரோக்கர்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் எந்த கையெழுத்து வேண்டுமானாலும் போடுவார் என்கிறார்கள்.  கொடுமுடி தாலுக்கா அலுவலகத்தில் உள்ள புரோக்கர்கள் அது தவிர பணம் கொடுக்காமல் மாசிலாமணி எந்த கையெழுத்தும் போட மாட்டார் என்கிறார்கள்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொல்லுவதை விட செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாசிலாமணி லஞ்சம் கேட்டு பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பதை தவிர்த்து தன் வீட்டில் உள்ள  பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் சுய உதவி குழு மூலம் ஏதாவது சொந்தத் தொழில் நடத்தலாம் அல்லது ஈரோடு மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம் என்கிறார்கள். ஈரோடு மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

தாசில்தார் மாசிலாமணியை ஆட்சியாளர்கள் அதிகாரிகள் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்கிற கேள்வி எழுகிறது.  மாதா மாதம் ஆர்டிஓ மற்றும் டிஆர்ஓ, கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு சரியாக கல்லாகட்டி விடுகிறாராம்.  தாசில்தார் மாசிலாமணி இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆட்சி அதிகாரங்கள் மாறினாலும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால் அதிகாரிகளை கொட்டத்தை அடக்கினால் லஞ்சம் வாங்குவது முற்றிலும் ஒழிக்கப்படும்

இதையும் படிங்க.!