chennireporters.com

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் அடாவடி இன்ஸ்பெக்டர் தினகரன்..

கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர் தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் ஆம்னி பஸ்  ஊழியர்கள் கூட்டமைப்பினர்.

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 500 பேருந்துகள் வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களுக்கு தினம் தோறும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உள்ளே இருந்து பேருந்து வெளியே வரும் நுழைவாயிலில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினகரன் ஒவ்வொரு பேருந்தும்  மாதம் ஒன்றிற்கு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை எனக்கு மாமுல் தர வேண்டும் என்று மிரட்டி வருகிறார்.

அப்படி மாமல் தராத கம்பெனிகளின் பேருந்துகள் உள்ளே இருந்து வெளியே வரும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஒரு வழக்கும் நோ பார்க்கிங்கில் பஸ்ஸை நிறுத்துவதாக ஒரு வழக்கும் போட்டு 2500 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தனியார் பஸ் டிரைவர்களை ஊழியர்களையும் அவமரியாதையாக பேசி மிரட்டுகிறாராம். நீங்கள் கொடுக்கும் இந்த சில்லரை காசு எனக்கு மட்டும் அல்ல ஏசி, டிசி, ஜேசி என எல்லா உயர் அதிகாரிகளுக்கும் பங்கு போகிறது என்று ஜம்பமாக பேசி மிரட்டுகிறாராம்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய இன்ஸ்பெக்டர் தினகர் ஜம்பமாக பேசி மிரட்டி பணத்தை வசூல் செய்கிறாராம். இதனால் இவரை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் வேலை செய்யும் தனியார் பேருந்து ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் எல்லாம் கடும் சொற்களால் சாபம் விட்டபடியே இருக்கிறார்களாம்.

இதையும் கேட்ட இன்ஸ்பெக்டர் தினகரன் உங்கள் சாபம் என்னை ஒன்றும் செய்யாது போங்கடா முடியாது கொடுங்கடா பணத்தை என்று பிச்சை எடுக்காத குறையாக கேட்டு வாங்குகிறாராம். இவர் வாங்கும் பணத்தில் உயர் அதிகாரிகள் பங்கு வாங்கவில்லை என்றால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் ஆம்னி பஸ் உரிமையாளர்கள். காய்கறி மற்றும் பழக்கடைகளிலும் தனது கைவரிசையை காட்டுவாராம் தினகரன்.

 

இதையும் படிங்க.!