மார்கழி மாத குளிரில் சென்னை உயர்நீதிமன்றம் சற்று அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. காரணம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தான்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலையொட்டி, தலைவர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ் தரப்பில் ஒரு அணியும், மோகன கிருஷ்ணன் தரப்பில் ஒரு அணியும் போட்டியிடுகிறார்கள்.
2023 ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல், தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிவருகிறது.
களத்தில் இருவருக்கும் மட்டுமே அதாவது பால் கனகராஜுக்கும், மோகனகிருஷ்ணனும் பலமாக மோதிக் கொள்கிறார்கள் என்கிறார்கள் ஐகோர்ட் வக்கீல்கள்.
இவர்கள் இருவர் மட்டும் தானா போட்டியாளர்கள் என்றால், இல்லை ஏற்கெனவே வக்கீல் சங்க செயலாளராக இருந்த வேல்முருகனும் களத்தில் நிற்கிறார்.
துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என்று 11 பதவிகளுக்கு தேர்தல் நடந்தாலும் ஐகோர்ட் வக்கீல் சங்கத்தின் தலைவர் பதவியை கைப்பற்றப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மோகன கிருஷ்ணின் கையே ஓங்கி உள்ளது. பால் கனகராஜ் தரப்பு மூடு பனி கூட்டமாகவே இருக்கிறது என்கிறார்கள் நடுநிலையான வழக்கறிஞர்கள் சிலர்.
எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் பந்தா இல்லாமல் சிங்கிள் மேன் ஆக உயர்நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் சாதாரண மனிதராகத்தான் எப்போதும் மோகன கிருஷ்ணன் இருந்து வருகிறார்.
நேர்மையை மனம் திறந்து பாராட்டும் மாண்புடையவர் தவறை தட்டிக் கேட்காமல் எப்போதும் மௌனமாய் இல்லாத மனிதர் யார் எந்த நேரத்தில் உதவிகள் கேட்டாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் மாண்பு கொண்டவர்.
பால் கனகராஜ் தற்போது பாஜகவின் மாநில துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார் தமிழகத்தில் எப்போதும் பாஜகவை எந்த வகையிலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் சமூகமும் வேகமாய் முனைப்புடன் செயல்படுகிறது .இதுவே அவருக்கு பெரும் பலவீனமாக இருந்து வருகிறது.
நடைபெற இருக்கும் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் சங்கத் தலைவர் பதவிக்கு மோகன கிருஷ்ணன் முன்னிலை வகிப்பதாக சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள் சிலர். சிலரோ கடும் போட்டி நிலவும் பாஜக தரப்பில் பணத்தை வாரி இறைத்து எப்படியாவது தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று வேலை செய்கிறார்கள் என்கிறார்கள் சிலர் மகுடம் சூடப் போவது யார் என்று இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.