chennireporters.com

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல். தள்ளாடும் தாமரை அணி.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில்  கடந்த வாரம் மும்முனை போட்டி நிலவி வந்தது.

 

அதாவது  வேல்முருகன் ஒரு அணியாகவும் , மோகன கிருஷ்ணன் ஒரு அணியாகவும், பால் கனகராஜ் ஒரு அணியாகவும் களத்தில் நிற்கின்றனர்.  இது தவிர பல்வேறு தரப்பினர்கள் பல பொறுப்புகளுக்கு போட்டியிடுகின்றனர்

 

ஆனால் ஏற்கனவே தலைவராக உள்ள மோகன கிருஷ்ணன் மற்றும் வேல்முருகனுக்கு தான் கடும் போட்டி நிலவி வருகிறது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

மூன்றாவது இடத்தையாவது பால் கனகராஜ் பிடிப்பாரா என தெரியவில்லை என்று சொல்கிறார்கள் ஆளும் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள்.  தாமரை அணி தற்போது தள்ளாடி வருகிறது என்றே சொல்லலாம் . ஏனென்றால் மோகன கிருஷ்ணன், பால் கனகராஜ் இருவருக்கும் மாற்றாக ஒரு மாற்றத்தின் முகமாக வேல்முருகன் வர வேண்டும் என்கின்றனர் சில வழக்கறிஞர்கள். 

 

அதற்காக அவர் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் . அதேபோல மூத்த வழக்கறிஞர்களும்,  இளம் வழக்கறிஞர்களும் ஒரு மாற்றத்திற்கான முகமாக வேல்முருகன் வரட்டுமே வந்தால் தவறு என்ன என்கின்றனர். வேல் முருகன்  சமூக வலைதளங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆதரவு கேட்டு வருகிறார்.

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் படு வேகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தற்போது நேரடியான போட்டி மோகன கிருஷ்ணனுக்கும், வேல்முருகனுக்கும் மட்டும் தான்  என்கின்றனர்.   தற்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில்  வேல் முருகன் முந்துகிறார் என்றே சொல்லலாம். தேர்தலுக்கான பிரச்சாரங்களும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

இதையும் படிங்க.!