chennireporters.com

ஆவடி ரிஜிஸ்டர் ஆபீஸில் சண்டை போட்டு கொண்ட மல்லிகேஸ்வரியின் கமிஷன் ஏஜென்ட்டுகள்.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன் தினம் 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 2 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

கைபற்றப்பட்ட  பணம் ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரிக்கு  தர வேண்டிய  கமிஷன் பணம் என்று  லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த நான்காண்டு காலத்திற்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார் மல்லிகேஸ்வரி அவர் மீது பல புகார்கள் நிலுவையில் உள்ளன.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கும் பத்திரப்பதிவுத்துறை செயலாளருக்கும் பல புகார்கள் அனுப்பி உள்ளனர். இது தொடர்பான செய்தி நேற்று நமது சென்னை ரிப்போட்டர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

அது தவிர பதிவாளர் மல்லிகேஸ்வரிக்கு கமிஷன் வாங்கி தரும் ஏஜென்ட்கள் யார் யார் அவர்கள் எந்த மாதிரியான பத்திரங்களை பதிவு செய்வார்கள் என்பதை தெளிவாக நாம் விளக்கி இருந்தோம்.

இந்த நிலையில் நேற்று ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒன்று கூடிய மல்லிகேஸ்வரியின் புரோக்கர்கள் ஒருவரை ஒருவர் மாறி, மாறி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுக்கோண்டதாக  கூறப்படுகிறது. ஏற்கனவே மல்லிகேஸ்வரிக்கு நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தவர்களின் பெயர்களை எல்லாம் இந்த செய்தியில் போடாமல் போனதற்கு காரணம் என்ன, யார்? நமது பெயர்களை மட்டும் போட சொன்னது யார் என்று அவர்களுக்குள்ளாகவே சண்டை போட்டு கொண்டார்கள்.

அது தவிர யார் , யார் கடந்த ஆறு மாதங்களில் அதிக எண்ணிக்கையில்  ஸ்பெஷல் டாக்குமெண்ட் பத்திரம் பதிவு செய்தவர்கள் யார் ?  யார் யார் மல்லிகேசுவரியால் அதிகம் சம்பாதித்தது ? மேடத்திற்கு அதிகமாக கமிஷன் வாங்கி கொடுத்தது யார்?  சில முக்கிய பெயர்கள் அந்த செய்தியில் இடம் பெறவில்லை நமது பெயர்கள் மட்டும் வந்தது எப்படி என்று நொந்து கொண்டனராம்.

வள்ளி மயில் பினாமி ஜெயித்தூன் நேரடியாகவே பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரியிடம் சென்று நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை எங்களுடைய பெயர்கள் எல்லாம் பத்திரிகைகள் வெளிவந்து எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது என்று கோபம் பொங்க பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாக்குமெண்ட் ரைட்டர்களிடம் பணம் வாங்கி தரும் வேலை செய்யும் ஏஜென்ட் கிருஷ்ணன் மற்றும் மல்லிகேஸ்வரிக்கு கார் ஓட்டுநராக  வேலை பார்க்கும் அறிவின் மறு பெயர் கொண்ட உயர்ந்தவரும் இன்னும் சிலர் நேற்று அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையின் நடத்திய அன்று பணத்துடன் தப்பி ஓடியதாக சொல்லுகிறார்கள் சில அலுவலக ஊழியர்கள்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு சோதனை  நடந்து ஒரு நாள் தான் ஆகிறது.  இந்த நிலையில் உயர்ந்த வரும் கார் ஓட்டுநருமான நபர்,  இயேசுவின் மறு,  பெயர் கொண்டவரிடமும் மற்றும் பல ஆவண எழுத்தர்களிடம்  மேடம் மல்லிகேஸ்வரிக்கு  கொடுக்க  வேண்டிய கட்டிங் ,கமிஷன் அதாவது இன்றைய பட்டுவாடா 17ஆம் தேதி அன்று பத்திரப்பதிவு ஆனதற்கான கமிஷனை தர கணக்குப் போட்டு காசை வாங்கிக்கொண்டு போனராம்.

மல்லிகேஸ்வரியால் பயனடைந்த சாரதா, சின்னி, இன்னும் பலர் நம் பெயர் வரவில்லை என்று சந்தோஷப்பட்டு கொண்டார்களாம்.  இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தினர் சோதனை நடத்த வந்த  அதிகாரிகளுக்கு ஈமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளனராம்.

ஒரு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் மறுநாளே மேடம் கமிஷன் வாங்க  பயப்படாமல் பணியாற்றும் திறமை யாருக்கும் வராது ”மேடம் யாருக்கும் அஞ்சாத பெண் சிங்கம்” தான் என்கிறார்கள் ஆவடி ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர்.

இதையும் படிங்க.!