chennireporters.com

கலெக்டர் அலுவலகம் வந்தார் மங்கம்மா.

தெலுங்கானா புவனபள்ளி மாவட்டத்தில் வயதான மூதாட்டியின் குறையைக் கேட்க மாடியிலிருந்து இறங்கி வந்து படியில் உட்கார்ர்ந்து நடவடிக்கை எடுத்த கலெக்டரின் நடவடிக்கை தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடக்க முடியாத  ஒரு மூதாட்டி ஒவருக்கு இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை.  வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் மாவட்ட கலெக்டர் ஆபிசில் புகாரளிக்க முடிவு செய்து  கலெக்டர் அலுவலகம் வருகிறார் மங்கம்மா.

படிகளில் ஏற முடியவில்லை படிகளில் அமர்கிறார் நடக்க இயலாமல் தகவல் டவாலி மூலமாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் செல்கிறது. மாவட்ட கலெக்டர் மாடியிலிருந்து இறங்கி வருகிறார் மூதாட்டி அமர்ந்திருந்த படிகளில் மூதாட்டி அருகே அமர்கிறார்.

அந்த இடம் நீதிமன்றமாக மாற நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை பரிவுடன் ஆரம்பிக்கிறது. படிக்கட்டுகளே நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை ஆரம்பமாகிறது நீதிபதி ஆவணங்களை கேட்கிறார்.

மூதாட்டியும் தனக்கு ஓய்வூதியம் கிடைக்காத ஆவணங்களை மாவட்ட கலெக்டர் ஒப்படைக்கிறார். அந்த இடத்திலேயே உடனடியாக விசாரணை செய்து அந்த மூதாட்டிக்கு ஓய்வூதியம் கிடைக்க  உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர்பெயர் : அப்துல் அசீம் மாவட்டம் : புவன் பள்ளி மாநிலம் : தெலுங்கானா.

இதையும் படிங்க.!