நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.
குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் அறிமுகமான மீனா பின்னாளில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
மீனாவுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. மீனாவின் கணவர் பெயர் வித்யாசாகர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இவர் நடிகர் விஜயின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மீனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தனது கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தார்.
மேலும் சென்னையில் குடும்பத்துடன் அவர் தங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் ஆகிய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதிலிருந்து இருவரும் மீண்ட பின்னர்.
மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனாவின் பக்க விளைவுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நுரையீரல் பிரச்சனையால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் வித்யாசாகர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று வித்யாசாகர் காலமானார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் இறப்புக்கு திரைத் துறையினர் மற்றும் மீனாவின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில் திரைப்பட நடிகையும் என் குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.