பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை ஓரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் நள்ளிரவில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட விவகாரம் பாண்டிச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன பூஜை? யாருக்கான பூஜை? எதற்காக நடத்தப்பட்ட பூஜை? என்று பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகிறது.
பத்திரிகையாளர்கள் முதல்வருக்கு எதிராக செய்திகள் எழுதக்கூடாது என்று உயர் போலிஸ் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், பிரபல பத்திரிகை அதிபர் கோபால்ஜியும் இருவரும் நள்ளிரவில் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசியதாக புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதே சமயம் அவர்கள் இருவரும் வடமாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட அகோரி ஒருவர் மூலம் ஒரு பெரும் பூஜை நடத்தப்பட்டு, அதில் இருவரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளவர் என்பது ஊர் அறிந்த உண்மை.
புதுச்சேரி கவர்னர் குனியில் கைலாசநாதன்
எந்த செயலையும் சாமியார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனை பெற்றே செய்வார். இந்த நிலையில் ரங்கசாமியும் பிரபல பத்திரிகை அதிபர் கோபால்ஜியும் அகோரி பூஜையில் பங்கேற்றதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் வெளியாகும் பிரபல தமிழ் நாளிதழ் வேலூர் பதிப்பின் உரிமையாளர் கோபால்ஜி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கடந்த மாதம் 7ம் தேதி புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் குனில் கைலாச நாதன் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த பத்திரிகை அதிபர் பாஜக மேலிட தலைவர்களுக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் மிகவும் நெருக்கமானவர் அது மட்டும் இல்லாமல் விசுவ இந்து பரிசத் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ள காந்தி சிலை எதிரே உள்ள பிரபல The Promenade ஹோட்டலில் தங்கி உள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி நேரடியாக ஓட்டலுக்கு சென்று பத்திரிகை அதிபர் கோபால்ஜி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. தன்னுடைய பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு ரங்கசாமி மட்டும் தனியாக பத்திரிகை அதிபருடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக கூறப்படுகிறது.
மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி உள்ளிட்ட சில முக்கியமான பைல்கள் கையெழுத்து ஆகாமல் புதுச்சேரியின் அதிகாரம் படைத்தவரின் அலுவலகத்தில் முடங்கியுள்ளதாம். இந்த பைல்களை கிளியர் செய்து தருமாறு பத்திரிகை அதிபரிடம் ரங்கசாமி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கோபால் ஜி
இதற்கு பத்திரிகை அதிபர் முயற்சி செய்வதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஓட்டல் அறையிலேயே நள்ளிரவு அகோரி பூஜை ஒன்று நடை பெற்றதாம்.
இதற்காக வடமாநிலத்தில் இருந்து அகோரி ஒருவர் புதுச்சேரிக்கு அழைத்துவரப்பட்டாராம். இந்த அகோரி பூஜையில் பத்திரிகை அதிபர் கோபால் ஜி, முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஒரு சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
நீண்ட காலமாக முடியாத சிக்கலான விவகாரங்கள் பிரச்சனைகள் சுமூகமாக முடிவதற்காக இந்த அகோரி பூஜை செய்யப்பட்டதாக புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த செய்தி குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தினமலர் வெளியீட்டாளர் ஆசிரியருமான கோபால் ஜி ஆகியோர் அவர்கள் தரப்பு மறுப்பையோ அல்லது விளக்கத்தை அளித்தால் அதையும் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.