chennireporters.com

#News 7 Management; சம்பளம் வழங்காமல் தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் நியூஸ் 7 நிர்வாகம்.

#exclusive story

நியூஸ் 7 நிர்வாகத்தில் உள்ள ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்காமல் தொழிலாளர்களின் வாழ்க்கையில் விளையாடும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையை உடனே வழங்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

தியாகச் செம்மல்

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இதில் பலருக்கு, கடந்த ஆண்டு வழங்க வேண்டிய சுமார் 3 மாதம் முதல் 8 மாதம் வரையிலான சம்பள நிலுவைத் தொகையும் தற்போது வரை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு இதேபோல் சம்பள பிரச்னை எழுந்தபோது சங்கத்தின் சார்பாக நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியரை சந்தித்து உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாதந்தோறும் சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவந்தாலும், அதற்கு முன்னர் தர வேண்டிய சம்பள நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருந்து வந்தது.

வைகுந்தராஜன் சுப்பிரமணியன்

ஆகவே, பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக கடந்த ஆண்டு இறுதியில், தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் சம்பள பிரச்னை தலைதூக்கியுள்ளது.

மாத சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்களுக்கு, ஒரு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காவிட்டாலும் கூட, அந்த குடும்பம் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியிருக்க, மாதக்கணக்கில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பணியாளர்கள் சந்தித்துவரும் இன்னல்களை கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக உள்ளது.

வைகுந்தராஜன்

வெளியூர்களிலிருந்து வந்து, சென்னையில் விடுதிகளிலும், வாடகை வீடுகளிலும் தங்கி வேலை செய்பவர்களின் துன்பத்தை சொல்லில் விளக்க முடியாது. அதில் எத்தனை பேர் சாப்பிடுவதற்கே வழி இல்லாமல் இருப்பார்கள் என்பதை நினைத்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது.

ஆகவே, இனியும் தாமதிக்காமல் சம்பள நிலுவை அனைத்தையும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் உடனே வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இனி வரும் மாதங்களிலும் உரிய நேரத்தில் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

Centre of Media Persons for Change

நான் இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்று சொல்லிக் கொள்ளும் நியூஸ்7 நிர்வாகத்தின் செய்தி ஆசிரியர் தியாகச் செம்மல் கொலை குற்றத்தில் ஈடுபட்டுள்ள பல பிராடுகளை ரிப்போர்ட்டர்களாக பணியில் சேர்த்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் நபர்களை தட்டிக் கொடுத்து வருகிறார். அது தவிர நிர்வாகத்திடம் ஊழியர்களின் சம்பளத்தை வாங்கித் தராமல் விளம்பரம் என்கிற பெயரில் பல நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவாக செய்தி வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே அந்த நிர்வாகத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து தன்னை யோக்கியமானவர் என்று தியாகச் செம்மல் சொல்லிக் கொள்வதும் நிர்வாகத்தை காப்பாற்றுவதும் ஊழியர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!