chennireporters.com

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கேரளாவில் கைது

பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது.  பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர்.


நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவன தலைவராக இருக்கிறார். இவர் மீது ஏற்கனவே இரு கொலை வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நாங்குனேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சாமிதுரை என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சாமிதுரையை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதால் ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் இருந்து வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!