chennireporters.com

திருப்பதி திருமலையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் திருத்தலத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா தவிர இந்தியா முழுவதும் பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.  கீழ் திருப்பதியில் இருந்து திருமலை உள்ள பெருமாளை சந்திக்க 21 கிலோமீட்டர் பஸ் மற்றும் ஜீப்புகளில் பக்தர்கள் செல்ல வேண்டி உள்ளது.

மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. இதனால் பேருந்து மற்றும் ஜீப்புகளில் போவதால் காட்டுப் பகுதி முழுவதும் மாசடைகிறது.  எனவே டீசல் பொருத்திய வாகனங்களை செல்ல அனுமதிக்காமல் அரசு பேருந்துகளையும் நிறுத்திவிட்டு ஆந்திரா அரசு மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

இதனால் புகை மாசு குறைய வாய்ப்பு இருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் திருப்பதி திருமலையில் மின்சார பேருந்துகளை இயக்கி தொடங்கி வைக்கிறார்.

திருப்பதி மலைப்பாதையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஓலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய எலெக்ட்ரிக் பேருந்துகள் திருப்பதிக்கு கொண்டு வரப்படுகின்றன. ஏழுமலையான் பிரமோற்சவம் தொடங்கும் 27ம் தேதி இப் பேருந்துகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க.!