நிலத்தகராறில் கட்டப்பஞ்சாயத்து செய்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் என கோயில் பூசாரியை மிரட்டும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் இவருக்கும் இவரது பெரியப்பா சத்தியமூர்த்தி மகன் விநாயகம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது.
இது தொடர்பாக திருப்பெரும்புதூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது. கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்தி தனக்கு சொந்தமான இடத்தை தனது அண்ணன் துரைக்கு விற்க முடிவு செய்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
கடந்த 2002 ம் ஆண்டு சத்திய மூர்த்தி இறந்த பிறகு இதுநாள் வரை தனது சொந்த ஊரான வளர்புரத்திற்கு சத்தியமூர்த்தி குடும்பம் வரவே இல்லை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சத்தியமூர்த்தியின் மனைவி குணபூஷணம் உடல் நலக்குறைவால் இறந்து போனார். இறந்த அந்த உடலை எடுத்து வந்து தணிகா கட்டியுள்ள அம்மன் கோயில் கட்டி இருக்கும் இடத்தில் குணபூசத்தின் உடலை வைத்து தகராறு செய்தனர்.
இது தொடர்பாக தணிகாசலம் திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரிகள் தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் உடலை அடக்கம் செய்துவிட்டு நீங்கள் அனைவரும் வெளியேற வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இங்கு யாரும் இருக்கக்கூடாது
இந்த இடத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பிறகு இடம் யாருக்கு சொந்தம் என்பதை நீதிமன்றம் தீர்மானித்த பிறகு இடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று போலீசார் சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் விநாயகம் மற்றும் நிர்மலா அவரது குடும்பத்தினர் ஆகியோர் தொடர்ந்து தணிகாசலத்திடம் சண்டை போட்டு கோயில் கட்டியிருந்த இடத்தை இடித்து ஓட்டை பிரித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இந்த நிலையில் மேற்படி இடத்தின் உரிமையை துரையின் மகன் இந்த இடத்திற்கான அதாவது வீட்டு வரி மின் இணைப்பு குடிநீர் வரி என அனைத்து ஆவணங்களையும் தனது அப்பா பெயரில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தணிகாசலம் மற்றும் விநாயகம் குடும்பத்திற்கு தொடர்பு இல்லாத அதே கிராமத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு என்பவர் விநாயகம் குடும்பத்திற்கு ஆதரவாக திருநாவுக்கரசு தணிகாசலம் குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் கஞ்சா கேஸ் போட்டு சிறையில் தள்ளி விடுவதாகவும் தான் வைத்திருக்கும் போலீசு துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று விடுவேன் என்றும் தணிகாசலம் குடும்பத்தினரை மிரட்டி வருகிறார்.
இந்த நிலையில் தணிகாசலம் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரில் சப்- இன்ஸ்பெக்டர் என்கிற பதவியை திருநாவுக்கரசு தவறாக பயன்படுத்தி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து நாம் திருநாவுக்கரசை தொடர்பு கொண்டு அவரது கருத்தை அறிய முயன்றோம் அவர் தற்போது எந்த காவல் நிலையத்தில் வேலை செய்கிறார் என்று தெரியவில்லை. அந்த கிராமத்தை சேர்ந்த சிலரிடம் நாம் பேசினோம் அப்போது அவர் திருநாவுக்கரசு திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் இருந்த போது சீனிவாசன் என்கிற வழக்கறிஞரிடம் தகராறு செய்து பெரிய பிரச்சினையாகி அந்த காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு வேறொரு காவல் நிலையத்திற்கு பணிக்கு போய்விட்டார்.
ஒரு அது தவிர தனது சொந்த ஊரான வளர்புரத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வாங்கி இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் திருநாவுக்கரசு சப்-இன்ஸ்பெக்டர் குடிபோதையில் பல பெண்களிடம் இரவு நேரங்களில் ஆபாசமான அருவருக்கத் தக்க வகையில் பேசுவாராம் இதில் பாதிக்கப்பட்ட திருநாவுக்கரசின் தூரத்து உறவினரான ஒரு பெண் தற்போது பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
அது தவிர திருநாவுக்கரசின் அண்ணன் கருணாகரன் மகன் ராஜேஷ் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அது தவிர அவர் மீது மப்பேடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டத்திற்கு புறம்பான பல வேலைகளை செய்வதையே தொழிலாக கொண்ட சப்- இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் வளர்புரம் கிராம பொதுமக்கள்.