ஆரம்பாக்கம் அருகே பூவாலை என்ற கிராமத்தில் மிகப்பெரிய மாந்தோட்டம் உள்ளது. இந்த மாந்தோப்பில் புழல் ரெட்டை ஏரி பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஜ் மூன்று இடங்களில் பாலாஜி விளையாட்டு மற்றும் மணமகிழ் மன்றம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர்களை மையமாகக் கொண்டு நடைபெற்று வந்த கிளப்பில் நடைபெற்று வந்த்து. இங்கு பல லட்சக்கணக்கில் பணம் வைத்து’’ ரம்மி மற்றும் மங்காத்தா” சூதாட்டும் நடைபெறுவதாக புகார் கூறப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட போலீசார் பாலாஜி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கிளப்பில் இருந்த சுமார் ரூ 6,39,000 ரொக்கம் மற்றும் பணம் என்னும் இயந்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
கிளப்பில் இருந்த ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தொழிலதிபர்கள் பலர் நூற்றுக்கணக்கான சொகுசு கார்களில் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது.
இந்த பாலாஜி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வந்து மது மாது என சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. அந்த தொழிலதிபர்களை கிளப்பு உரிமையாளர்களே அவர்களை அழைத்து வந்து சீட்டாட்டம் முடிந்ததும் திரும்பும் அவர்களை வீட்டுக்கே அழைத்து செல்வதாக அழைத்து சென்று விடுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்த சூதாட்ட கிளப்பில் அனைத்து வசதிகளும் உள்ளன இந்த சூதாட்ட கிளப்பில் பல அரசியல் அரசு வி.ஐ.பிகள் பலர் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த கிளப்பில் சிலம்பரசன், தினேஷ், வெங்கடேஸ்வரராவ், சுரேஷ், சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் அதாவது நெல்லூர், கூடுர், திருப்பதி, சித்தூர், ரேணிகுண்டா, சூலூர் பேட்டை, நாயுடு பேட்டை, சத்தியவேடு ஆகிய பகுதிகளில் இருந்து தொழிலதிபர்கள் பலர் சொகுசு கார்களில் இந்த கிளப்பிற்கு சூதாட வருவர்களாம்.
இந்த சூதாட்ட கிளப் பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆரம்பாக்கம் மீஞ்சூர் பொன்னேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது அதிகமாக ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சூதாட்ட கிளப் நடைபெற்று வந்தது. இந்த சூதாட்ட கிளப்பை நடத்தும் சுரேஷ் மற்றும் ரமேஷ் இருவரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ தி. நகர் சத்யாவுக்கு சொந்தமான கிளப் என்று போலீஸ்காரர்களிடம் சொல்லி வருகிறார்கள்.
இது குறித்து அதிமுக பிரமுகர் டி நகர் சத்யாவின் கருத்தை அறிய நாம் பலமுறை தொடர்பு கொண்டோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை அவர் தரப்பு கருத்தை தெரிவித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
அதன்படி ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரமும் டிஎஸ்பி அலுவலகத்திற்கு 30 ஆயிரம் எஸ்பி அலுவலகத்திற்கு மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சமும் டிஐஜி அலுவலகத்திற்கு மாதம் ஒன்றுக்கு இரண்டு லட்சமும் லஞ்சம் கொடுத்து வந்ததாக சொல்லுகிறார்கள். இந்த கிளப் நடத்தும் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆரம்பாக்கம் தனிப்படை தலைமை காவலருக்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே ஒரு உயர் போலிஸ் அதிகாரி திருவள்ளூரில் பணியாற்றும் போது சூதாட்ட கிளப் நடத்த தேவராஜன் என்பவர் விண்ணப்பித்தார். ஆனால் அந்த உயர் அதிகாரி அனுமதிக்கவில்லை. அந்த உயர் அதிகாரி டிஐஜி தேன்மொழியிடம் நேரில் சென்று அனுமதி கேட்டார் அவரும் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் தி.நகர் சத்யா அன்றைய ஆட்சியாளர்களிடம் சொல்லி அந்த உயர் போலிஸ் அதிகாரியை வேறு மாவட்டத்திற்கு மாற்றினார்கள் அது தவிர அந்த சூதாட்ட கிளப்பில் விபச்சாரமும் நடைபெற்று வருவதாக சொல்லுகிறார்கள். அந்த பகுதி மக்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா, பம்பாய் போன்ற பகுதியில் உள்ள பெண் அழகிகள் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை நாள் வாடகைக்கு பேசப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
சூதாட்ட கிளப்பில் சூதாட வரும் பணக்காரர்களுக்கு மது மாது நாட்டுக்கோழி கறி, பிரியாணி, மது வகைகளில் அனைத்து மது வகைகளும் எல்லாம் கிளப்பு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இந்த சூதாட்ட கிளப்பில் பத்து டேபிள்கள் வரை சீட்டு ஆடுவார்கள் டேபிள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என விளையாட்டு தொடங்கும் ஒரு சில பணக்காரர்கள் பத்தாயிரம் ரூபாய் 25 ஆயிரம் 50 ஆயிரம் ஒரு லட்ச ரூபாய் என பணம் வைத்து விளையாடுவார்கள் முதல் முறையும் விளையாட கட்டப்படும் டெபாசிட் தொகை கிளப்பு நடத்துபவர்கள் எடுத்துக் கொள்வார்.
நாள் ஒன்றுக்கு கிளப்பு நடத்துபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரும் மாதத்திற்கு 60 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் இந்த கிளப்பு உரிமையாளர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் லஞ்சமாக கொடுத்து தங்கு தடை இன்றி சீட்டாட்ட கிளப் நடத்துவார்கள்.
தற்போது போலீசார் ஏன் சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை என்கிறார்கள் கிளப் ஊழியர்கள் ஆட்சி மாற்றப்பட்டதால் போலீஸ் அதிகாரிகள். அதிக அளவில் பணம் கட்டதாக சொல்லுகிறார். கிளப் நடத்தும் உரிமையாளர் ஒருவர் நிரந்தரமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஏங்கி வரும் ஒரு நம்பர் லாட்டரி வெளி மாநில லாட்டரி இந்த சீட்டாட்டக் கிளப்புகள் மறைமுக பார்பி அனைத்தையும் தடுப்பார்களா என்கின்றனர் ஆரம்பம் பகுதி பொதுமக்கள்.