#சிறப்பு செய்தி# சிறப்பு செய்தி#
சென்னை மாநிலக் கல்லூரி எனப்படும் பிரசிடென்சி கல்லூரி தூய்மையாக இல்லாமலும் திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் குப்பை கூலங்களாக பாழடைந்த கட்டடத்தை போல காணப்படுகிறது இது குறித்து தாங்கள் விரிவாக ஒரு செய்தியை எழுத வேண்டும் என்று நமது அலுவலகத்திற்கு சில புகார்கள் வந்தது அதனை தொடர்ந்து நாம் நேரடியாக கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தோம்.

நாம் அடித்த ரவுண்ட பில் நமக்கு கிடைத்த புகைப்படங்கள் கல்லூரியின் நிலை குறித்து உள்ளதை உள்ளபடியே விரிவாக எழுதுகிறோம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதையும் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
1840 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி ஏறக்குறைய 185 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லூரி ஆக கருதப்படுகிறது. சென்னையில் உள்ள பிரதான சின்னங்களில் சென்னை மாநிலக் கல்லூரியும் ஒன்று. ஆனால் அது அதனுடைய அழகிய வண்ணத்தையும் கட்டிடக்கலையும் கலை இழந்து பாழடைந்த கட்டிடத்தைப் போல தற்போது காணப்படுகிறது.
கல்லூரி நுழைவாயிலில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் ஒழுங்காக இல்லாமல் ஏதோ மீன் மார்க்கெட் மீன் வாங்க வந்த கூட்டத்தை போல ஒழுக்கம் இல்லாமல் இருந்தது.


பழைய கட்டிடத்தின் உள்ளே நுழைந்து இரண்டு மாடிகளிலும் ஆய்வு செய்தோம். திரும்பிய பக்கமெல்லாம் புறாக்களின் எச்சங்களும் நாற்றமும் துர்நாற்றம் அடிக்கிறது. திரும்பிய பக்கங்கள் எல்லாம் பழைய பேப்பர்கள் உடைந்த நாற்காலிகள் ஒட்டடைகள் பல ஆண்டுகள் பெயிண்ட் அடிக்காமல் சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.



கல்லூரியின் ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து காணப்படுகிறது. கழிவறைகளின் நிலையை சொல்லி மாளாது பழைய காலத்து டென்ட் கொட்டாய் நினைவுபடுத்தும் வகையிலேயே அந்த கழிவறைகள் இருந்தன. ஒவ்வொரு மாடியிலேயும் பெருக்காமல் குப்பை கூலங்களாக காணப்பட்டது. ஒவ்வொரு துறை தலைவர்களின் அலுவலகங்களில் உள்ள மின்விசிறிகள் பாழடைந்து அழுக்கு படிந்து காணப்பட்டது. மேசை விரிப்புகள் தரை விரிப்புகள் எதுவும் இல்லாமல் ஏதோ விட்டலாச்சாரியா படத்தில் வரும் பழைய கட்டிடத்தை நினைவுபடுத்துவதைப் போலவே இருக்கிறது.
தற்போதைய மாநில கல்லூரியின் நிலைமை. மாநிலக் கல்லூரியின் தனித்தன்மையையும் பொலிவையும் இழந்து அமங்கலமாக காணப்படுகிறது தூய்மை பணியாளர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதினால் வேகமாக தூய்மைப் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
மாநிலக் கல்லூரியில் உள்ள உணவகத்தின் நிலைமை சொல்லி மாளாது. சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாமல் கையலம்பும் இடம் உடைந்து கட்டுக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளன. உட்காருவதற்கு ஒரு இருக்கைகள் கூட போடப்படவில்லை. அரசு கல்லூரியில் இயங்கும் கேண்டிலின் அவல நிலையை அரசு சீர் செய்ய வேண்டும் என்கின்றனர் மாணவர்கள். தமிழ் துறை பேராசிரியர்கள் அருகில் இருந்த சில அறைகளில் பாழடைந்த சேர்களும் குப்பை குளங்களும் சிதறி கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் நாய்கள் குறைத்துக் கொண்டே இருக்கின்றன பிரசிடென்சி கல்லூரியில் நாய்கள் கூட படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் மாணவர்கள்.
ஏறக்குறைய நாம் பார்த்த வரையில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் ஒவ்வொரு அறைகளிலிருந்தும் மாடிப்படிகளில் இருந்து குறைத்துக் கொண்டே என் எஸ் எஸ் பயிற்சி மையத்தின் அருகில் குறைத்துக் கொண்டே ஓடியது.
அரசு பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தில் உடைகளில் கவனம் செலுத்தும் அரசு அரசு கட்டுப்பாட்டின் கீழ் இளங்கும் கல்லூரிகளில் மாணவர்களின் உடைகள் தலைமுடிகள் அனைத்தும் ஒழுங்காக இருக்கின்றதா என்பதை கல்லூரி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டும் என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.
கல்லூரியின் நுழைவாயிலில் ஒழுக்கம் இல்லாத மாணவர்கள் உடைகள் அணிந்து வருபவர்களை கல்லூரி வளாகத்திற்குள் சேர்க்காமல் வெளியேற்ற வேண்டும் அது தவிர சிசிடிவி பொருத்தப்பட்டு கல்லூரிக்குள் வருபவர்கள் எல்லாம் எந்தெந்த துறையில் படிக்கிறார்கள் என்கிற அடையாளத்தை சரிபார்த்த பிறகே மாணவர்களை கல்லூரி நிர்வாகத்திற்குள் நுழைய நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் கல்லூரி வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பதையும் பைக் சாகசம் செய்வதையும் கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் நாம் பார்த்த வரையில் ஒரே ஒரு மாணவர்கள் கூட ஒழுங்கான தலைமுடியுடன் சட்டை பேண்ட் அணிந்து இருக்கவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் அரக்கோணம் திருவள்ளூர் திருத்தணி என பெயிண்டுகளால் குறியீடு கள் குறிக்கப்பட்டுள்ளன.
கல்லூரியின் முதல் பிரின்ஸ்பல் ஆன ஹயர் பர்டன் பவல் அவர்களின் சிலையை துடைத்து பல வருடக் கணக்கில் ஆனதைப் போல தோன்றுகிறது அந்த சிலையின் தோற்றம் தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் படித்த கல்லூரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை என்கின்றனர் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும்.
ஹயர் பர்டன் பவல்
எனவே தினமும் மாநில கல்லூரியின் வழியாக செல்லும் முதல்வர் திடீரென ஒரு நாள் கல்லூரியின் நுழைந்து திடீரென மேற்பார்வை செய்தால் கல்லூரியின் உண்மை நிலை தெரிய வரும் எனவே தமிழக முதல்வர் மாநிலக் கல்லூரியை புதிய பொலி உடனும் புதிய தோற்றத்துடனும் புனரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் மாணவர்களும் பெற்றோர்களும்.
