மின் கட்டண உயர்வை கண்டித்து பாடை கட்டி கர்மவீரர் காமராசரிடம் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது
மின்சார துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை மெல்ல, மெல்ல செய்து வரும்j வகையில் தற்போது மின்கட்டணம் எப்போதும் இல்லாத வகையில் உயர்தப்பட்டுள்ளது.
அதுவும் மின்துறை அமைச்சர் சட்டசபையில் மின்துறை லாபமாக இயங்குகின்றது என்று அறிவித்த சில தினங்களிலேயே இதுபோன்று மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு என்பது அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
மேலும் புதுச்சேரி அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சி, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதர உரிமையை பாதிக்க செய்து கார்ப்ரேட்டிடம் ஒப்படைக்க உள்ளதாக, மக்களிடம் அச்சம் அதிகரித்து உள்ளது.
இதனால் குடும்ப பொருளாதாரத்திற்கு பாதுகாப்பற்ற தன்மை ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு சேவை நோக்கத்தோடு செயல்பட வேண்டிய மின்துறையை வணிக நோக்கத்தோடும், கார்ப்ரேட் நிறுவனத்திற்கு ஆதரவாகவும் உயர்த்திய மின்சார கட்டணத்தை புதுச்சேரி அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தும் வகையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின்கட்டணத்தை உயர்த்தி, கார்ப்ரேட்டிடம் மின்துறையை ஒப்படைப்பது என்பது புதுச்சேரி மக்களை உயிருடன் சவப்பாடையில் ஏற்றுவதற்கு சமமானது என்பதை அரசுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பாடை கட்டி கர்மவீரர் காமராசரிடம் ஒப்பாரி வைக்கும் போராட்டம் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து இன்று புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்காக புதுச்சேரி அண்ணா சிலை அருகில் இயக்க நிர்வாகிகள் பொது செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து #சவப்பாடையுடன் ராஜா தியேட்டர் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு சவப்பாடையுடன் ஊர்வலமாக சென்றனர்.
இதில் புதுவை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் முன்னாள்அமைச்சர்பெத்தபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் #பாவாணன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க பிரகாஷ், பி போல்ட் அமைப்பின் பஷீர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சாமிநாதன், இந்திய தேசிய இளைஞர் முன்னண(INYF) #கலைப்பிரியன், சரவணன், புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் முத்துரங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கோபிநாதன், அய்யாக்கண்ணு, தமிழ்ச்செல்வன், குணபூஷனம், சிவச்சந்திரன், முருகன், சூரியமூர்த்தி, ராஜா, சக்திவேல், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இயக்க நிர்வாகிகள் குணசேகரன், ஆர்பர்ட், சிவபாலன், மகேஸ்வரி, இளமுருகன், மணிமாறன், ஆகியோர் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து இருந்தனர்.
இந்த ஊர்வலத்தை போலீசார் பிலால் ஓட்டல் அருகில் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசார் தடுப்பை மீறி, காமராஜர் சிலைக்கு சென்று, அவரது காலடியில் சவப்பாடையை இறக்கி வைத்தனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பெண்கள் மின்துறை தனியார் மயத்திற்கும், மின் கட்டண உயர்விற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி வைத்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தால் அண்ணாசாலை மற்றும் ராஜா தியேட்டர் சந்திப்பு பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.