chennireporters.com

கடலூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை.

கடலூர் பெண் வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் பெண் வழக்கறிஞரின் ஆடையை கிழித்து உருவி நிர்வானமாக்கி பட்ட பகலில் மாணபங்கம் செய்து கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்த வேண்டுகிறோம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பட்டபகலில் வயதான அப்பா அந்தோனி வயது 75 அம்மா மலர்விழி வயது (69) ஆகிய இருவரையும் வயதானவர்கள் என்றுகூட பார்க்காமல் மனசாட்சியே இல்லாமல் சொத்து தகராறில் மேற்கண்ட பெரியவரின் சொத்தை அபகரிக்க பல ஆண்டுகாலமாக திட்டம் தீட்டி வந்த பென்னாடத்தை சேர்ந்த ரொடி கும்பல் இன்று பட்டபகலில் பெண் வழக்கறிஞர் என்றும் பாராமல் பெண்ணாடம் அம்பேத்கர் காலனியில் அ.சுகந்தி வழக்கறிஞர் அவர்களை ஊரார் முன்னிலையில்  பெண் வழக்கறிஞர் சுகந்தியின் கீழாடை உருவி  அவரின் மார்பகத்தில் எட்டி உதைத்து கம்பியால் தலையிலும் உடம்பிலும் நெஞ்சியிலும் என்று அடித்து ஆடையை உருவி மானபங்கம் செய்துள்ளார்கள்.

இதில் கஞ்சா பார்ட்டி 1.ஜெயசீலன் 2.புரட்சிமணி 3.ரூபன் 4.சிவலிங்கம் 5.பிரவீன்குமார் ஆகிய கும்பல் திட்டமிட்டு படுபாதகமாக வழக்கறிஞரை பொதுமக்கள் முன்னிலையில் மானபங்கப் படுத்தியுள்ளனர்.

இவரை பென்னென்றும் பாராமல் மேற்கண்ட கூட்டுக்களவானிகளோடு சேர்ந்து அவர்கள் வீட்டு தாய்மார்கள் 6.வளர்மதி 7.உமா 8.நந்தினி ஆகியோரும் ஆடைகள் அவிழ்கப்பட்ட நிலையில் அம்மனமாக கிடந்த வழக்கறிஞர் சுகந்தியை சூழ்ந்து நெஞ்சிலும் வயிற்றிலும் இடுப்பிலும் என்று கண்டமேனிக்கு கடுமையான முறையில் தாக்கி நினைவிழக செய்துள்ளார்கள்.

இது தமிழ்நாடா அல்லது வடநாடா என்கிற அளவிற்கு இந்த சம்பவம் அச்சத்தையும் பீதியையும் கிளப்புகிறது. சாதா சொத்து பிரச்சனைக்கு யாருமில்லாத வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தம் ஒழுக ஒழுக ஆம்புலஸ் பிடித்து திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றால் இந்த கும்பல் அபடியே அங்கேயும் சென்று தாக்க வந்திருக்கிறார்கள். .

இப்படிப்பட்ட அனியாயத்தை அரங்கேற்றிய அயோக்கியர்களுக்கு ஆதரவாக பெண்ணாடம் காவல் ஆய்வாளர் திரு.குமார் அவர்கள் மானபங்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் வீட்டில் சம்பவ நேரத்தில் வயதான அப்பா அம்மா வழக்கறிஞர் சுகந்தி ஆகிய மூவர் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.

ஆனால் சென்னையில் வேலைபார்த்து வரும் தம்பி சாக்ரட்டிஸ் மீதும் வயதான அப்பா அம்மா மீதும் வழக்கறிஞர் சுகந்தி மீதும் சம்பவ இடத்திலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால் வசிக்கும் அக்கா சுதா மீதும் இடத்தின் உரிமையாளர் வயதான அத்தை மீதும் கஞ்சா போதையில் இருக்கும் ஜெயசீலன் கையை கிழித்துக்கொண்டு சிதம்பரம் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகிய வழக்கறிஞரை திட்டமிட்டே மானபங்கம் செய்த கும்பல் தற்போது அரசியல் மற்றும் பண பலத்தில் ட்ராமா நாடகம் நடத்தி வருகிறார்.

தமிழக முதல்வர் அவர்கள் பெண்ணென்றும் பாராமல் படித்தவரென்றும் பாராமல் பட்டப்பகலில் 11.09.2022 பகல் 12.30 க்கெல்லாம் பொதுமக்கள் முன்னிலையில் இப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உதவிட ஆணையிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிங்க.!