chennireporters.com

பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசு ரூ.3லட்சம்: கர்நாடக முதலமைச்சர் மீது புகார்..!

பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசு ரூ.3லட்சம்: முதலமைச்சர் மீது புகார்..!

கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு ரூ.3 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க நோக்கில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தான் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் அலுவலகம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. தீபாவளிக்கு பத்திரிகையாளர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் தீபாவளியை புத்தாடை, இனிப்புகள் கொண்டாடி விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

இதேப்போல் கர்நாடகத்திலும் தீபாவளி பண்டிகை 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டில் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், கர்நாடகாவில் தீபாவளிக்கு 26ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. புதன்கிழமை தான் ஏராளமானவர்கள் கர்நாடகாவில் தீபாவளியை கொண்டாடினர்.

கர்நாடகாவில் தீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு நிறுவனத்தின் பிரபலத்தை பொறுத்து பரிசுத்தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அதிலும் பிரபலமான பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தீபாவளி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள் பணத்தை திரும்ப தந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியினர் முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது உரிய நடவடிக்கை எடுக்க லோக் ஆயுத்தாவில் புகார் அளித்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் அலுவலகம் கொடுத்த ரூ.2.50 லட்சம் லஞ்சத்தை திருப்பி கொடுத்ததன் மூலம் கர்நாடகாவில் பத்திரிகை தர்மம் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

மேலும் பத்திரிகையாளர்கள் ஒருபோதும் பத்திரிகை தர்மத்தை மீறமாட்டார்கள் என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் உள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விளக்கம் அளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவிக்கபட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசியலில் பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசுத்தொகை அளிக்கப்பட்ட விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!