chennireporters.com

வழக்கறிஞரை குடிபோதையில் தாக்கிய போலீசார் நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.

திருத்தணியில் வழக்கறிஞர் மீது குடிபோதையில் இருந்த போலீசார் கூட்டாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையில் வழக்கறிஞரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை திருவள்ளூர் எஸ் பி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் திருத்தணி வழக்கறிஞர்கள்.

என்ன நடந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஸ்ரீ ராமுலுவிடம் நாம் விசாரித்தோம் கடந்த  12ம் தேதி காலில் ஏற்பட்ட காயத்திற்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன்.  அப்போது ஆஸ்பத்திரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் செல்வமணி என்பவர் என்னிடம் தகராறு செய்தார். வக்கீலாக இருந்தால் எப்போது வேனாலும் ஆஸ்பிட்டலுக்கு வந்து டாக்டர்களை தொந்தரவு செய்வாயா என்று கேட்டு மிரட்டினார்.

வழக்கறிஞர் ஸ்ரீராமுலு

வழக்கறிஞராக இருந்தால் இரவு 9 மணிக்கு மேல் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்பீர்களா என்று காவலர் செல்வமணி கேட்டதாக கூறப்படுகிறது.   அப்போது காவலர் செல்வ மணி குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும்  வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. இந்த  தகவல் குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு காவலர் செல்வமணி தகவல் அளித்தார்.

உடனடியாக வந்த சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் இரண்டு போலீசார்  மருத்துவமனைக்கு வந்து காவலர் செல்வமணியிடம் ஏன் தகராறு செய்தீர்கள் என்று ஸ்ரீராமுவை  தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களும் போதையில் இருந்ததாக சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள்.  இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீ ராமுலு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ஸ்ரீராமுலு திருத்தணி லாயர்ஸ் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தில் புகார் அளித்தார்.  அந்த புகாரின் மீது போலீசார்   இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.

அது தவிர மூன்று நாட்களுக்கு நீதிமன்றத்தை புறக்கணிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்.  சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

எஸ்.பி. செபாஸ் கல்யாண். ஐபிஎஸ்

ஆனால் இதுவரை குடிபோதையில் வழக்கறிஞரை தாக்கிய காவலர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஒரே ஒரு சப் இன்ஸ்பெக்டரை மட்டும்  திருத்தணி காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்துள்ளனர்.  இதுவரை எந்த காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 

இது குறித்து சில வழக்கறிஞர்கள் நம்மிடம் இரவு நேரத்தில் திருத்தணியில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மூடும் நேரத்தில் இவர்களுக்கு வர வேண்டிய தினசரி கட்டிங் பணத்தையும் ஓசி குடியையும் வாங்கி குடித்துவிட்டு அரசு மருத்துவமனை, கருவூலம், தாலுகா ஆபிஸ், நீதிமன்றம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸார்கள் அந்த வழியாக செல்லும் பொது மக்களை மிரட்டுவதுடன் ஆபாசமாக பேசுவதாகவும் அவர்களை மிகவும் மிரட்டி  பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் யாரும் தங்களது கருத்தை பதிவு செய்ய தயாராக இல்லை நாளுக்கு நாள் திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசாரின் அராஜகம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

போலீசார்  தமிழகத்தில் குறிப்பாக தாம்பரம் கமிஷனர் எல்லைக்குட்பட்ட  மணிமங்களம் பகுதியில் இரண்டு காவலர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் ஆவடியில் இறந்த மூதாட்டி வீட்டில் 36 சவரன் நகைகளை காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன் இன்ஸ்பெக்டர் டில்லி,  சப்- இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகிய மூவரும் திருடி உள்ளதாக கூறப்படுகிறது.   இவர்கள் நகை திருடிய செய்தி ஆவடி போலீஸ் கமிஷ்னருக்கே தெரியாது என்கின்றனர். இப்படி போலீஸ்காரர்கள் எல்லாவித தீய செயல்களிலும் ஈடுபடுவதை தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் திருத்தணி வழக்கறிஞர்கள்.

இதையும் படிங்க.!