chennireporters.com

காவல் உதவி செயலி மூலம் வரும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் எஸ்.பி. தீபா சத்யன் தகவல்.

சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம் என மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவசர காலங் களில் காவல் துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில், 66 சிறப்பம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டது. இதை கடந்த ஆண்டு ஏப்.4-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இது தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த காவல் உதவி செயலியை தமிழகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பேர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதில், சென்னையில் 46,174 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி 14 தலைப்புகளின்கீழ் 66 அம்சங்களை கொண்டிருக்கிறது. இது அவசரகால செயலியாகவும், பிற தேவைகளுக்காகவும் வடி வமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

100, 112 மற்றும் 101 போன்ற அனைத்து கட்டணமில்லா எண்களும் இந்த காவல் உதவி செயலி மூலம் பெறலாம். சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம். 37 மாவட்டங்கள், 9 காவல் ஆணையர் அலுவலகங்கள் கூகுள் மேப்பில் இணைக்கப்பட் டுள்ளன.

தமிழக மக்கள் தொகையில் வெறும் 0.36 சதவீதம் பேர் மட்டுமேஇதை பதிவிறக்கம் செய்துள்ள னர். எனவே, இந்த செயலியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்துவிழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். குறிப்பாக, கல்வி நிலையங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். காவல் உதவி செயலியை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து இதன் முழு பலன்களையும் பெற் றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீபா சத்யன் கூறினார்.

இதையும் படிங்க.!