chennireporters.com

தமிழக ஆளுநர் மீது சுப உதயகுமார் அவதூறு வழக்கு.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஆளுநர் பேசிய பேச்சு உண்மைக்கு புறம்பானது உடனடியாக அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று சுப உதயகுமார் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

‘எண்ணித் துணிக” எனும் தலைப்பில் குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடன் தமிழ்நாடு ஆளுநர் ஆற்றிய உரை செ.வெ.எண்:13 நாள் 06.04.2023 அன்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பாக வெளியாகியிருந்தது.

அதில் “ உதாரணமாக தென் தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டத்துக்கான வேலையைத் தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்றத் தாக்கம், அணு உலை வெடிக்கலாம், மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதிவந்தது தெரிய வந்தது” என ஆளுநர் பேசியிருந்ததாக இடம்பெற்றிருந்தது.

 

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்து என்பதால் ஆளுநர் தனது பேச்சைத் திரும்பப் பெற வலியுறுத்தி அவருக்கு மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாயிலாக அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் கூடங்குளம் அணுவுலைக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார்.

 

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில் “கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக தாங்கள் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. எனது கட்சிக்காரரின் மரியாதைக்கு ஊறு விளைவிக்கவே தவறான தகவலை பேசியுள்ளீர்கள்.

உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்குப் புறம்பானது என்பதால் அது அவதூறின் கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் எனும் முறையில் கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், அணுவுலைக்கு எதிராக போராடிய மக்களுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த தவறான கருத்துக்களை உடனடியாகத் திருத்த வேண்டும் இல்லையெனில் சட்டத் தீர்வுகளை நாடுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளனது.

இதையும் படிங்க.!