திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த கண்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.
கண்ளூர் கிராமத்திற்கு சொந்தமான வண்டி பாட்டை நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர்.
அந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தரவேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாக போராடி வருகிறார் சீனிவாசன்.
விவசாயம் செய்வதற்கு வழி இல்லாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொன்னேரி ஆர்டிஓ கும்மிடிப்பூண்டி தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனைவருக்கும் புகார் அளித்தும் எந்த வித பயனும் இல்லை என்கிறார் சீனிவாசனின் மகன் மதன்.கடந்த ஆறு வருடங்களில் பல புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாய் செயல்பட்டு வருகிறார்கள் இது தொடர்பாக கண்ளூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தற்போது அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் பொன்னேரி ஆர்டிஓ கும்மிடிப்பூண்டி தாசில்தார் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போடப்பட்ட உத்தரவின் மீது இதுவரை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ தாசில்தார் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட சீனிவாசன் அவரது மகன் மதன் ஆகிய இருவரும் பலமுறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தும் புகார் மனு அளித்துள்ளனர் .
அது தவிர பொன்னேரி ஆர்டிஓ கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது எனவே அந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியும் கூட இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த செய்தி குறித்து பொன்னேரி ஆர்டிஓ மற்றும் கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் நாம் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டபோது எதுவும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக எந்த கருத்தையும் அவர்கள் தெரிவிக்க முன்வரவில்லை.
75 வயது முதியவர் சீனிவாசனை அலைய வைத்து அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
நீதிமன்ற உத்தரவை கூட அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன் என்கின்றனர் அந்த கிராமத்து பொதுமக்கள்.