chennireporters.com

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி மரணமடைந்தார்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி  உடல் நலக்குறைவல் மரணமடைந்தார். நேற்று விடியர்காலை  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி.  இவர்  நடிகர் ஆவதற்கு முன்பாக தனது குரல் வளத்தால் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி மிமிக்ரி செய்து பிரபலமானவர்.

தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து உச்சம் தொட்ட இவர்
தமிழ் திரைப்படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மயில்சாமி வரும் வழியிலேயே  இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார் இறந்து போன நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடலை மீட்டு அவர் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில் நடிகர் மயில்சாமி ஏற்கனவே இருதயம் சம்பந்தமாக இதே மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

எனவே மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதையடுத்து அவரது மகன்களிடம் இறந்து போன மயில்சாமி உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலமாக பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர்களது வீட்டிற்கு நடிகர் மயில்சாமியின் உடலை அவரது மகன்கள் கண்ணீர் மல்க எடுத்து சென்றனர்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி பல்வேறு கூட்டங்களிலும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அனல் தெறிக்கும் தனது கருத்துக்களால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி இறப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இறந்து போன மயில்சாமியின் உடல் இன்று ஏவிஎம் மின்மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!