20 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய பெண் தலைமை காவலருக்கு தமிழக முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பட்டது.

April 17, 2023

By தே. ராதிகா

20 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய பெண் தலைமை காவலருக்கு தமிழக முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பட்டது.

 

கோவை சரக்கத்தில் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணிபவர் பூங்கொடி. இவர் பணிக்கு சேர்ந்து 20 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இவருக்கு 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு  வழங்கப்படும் தமிழ்நாடு  முதலமைச்சரின் காவல் பதக்கம் மற்றும் சான்றிதழ் இவருக்கு வழங்கப்பட்டது. அதை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் இன்று அவருக்கு வழங்கினார்.

பூங்கொடி கடந்த 20 ஆண்டு காலமாக எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டிலோ அல்லது ஒழுக்கமின்மையோ இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதனால் குடியரசு தின அணி வகுப்பின் போது சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

 

அதன்படி இவருக்கு கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று பதக்கத்தையும் சான்றிதழையும் வழங்கினார். விருது வாங்கிய பூங்கொடிக்கு அவருடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாராட்டுக்கலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 

Share:

தே. ராதிகா

April 17, 2023

Leave a Comment