chennireporters.com

கொடைக்கானல் மரக் கடத்தலை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி கடத்துவது தொடர் கதையாகி வருகிறது.

கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளில் குறிப்பாக ஆடலூர். பன்றிமலை .கே சி பட்டி குப்பம்மாள் பட்டி.மங்களம் கொம்பு போன்ற பகுதிகளில் அரசு அதிகாரிகள் ஆதரவுடன் மரங்கள் வெட்டி கடத்தல் பல வருடங்கள் பழமையான மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. சாலையோர இரு பகுதிகளிலும் பெரிய பெரிய மரங்களை வெட்டி போடப்பட்டு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

எந்த மரத்திலும் வனத்துறையினர் பதிவு செய்யப்பட்ட எண்கள் குறிக்கப்படவில்லை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மேல்மலை கீழ் மலை சிறுமலை பகுதிகளில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன வனத்துறை அதிகாரிகள் ஆதரவுடன் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுவதால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் செய்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற முடியும் எனக் கூறும் மலை கிராம மக்கள் மலைகளை காப்பாற்றுவாரா தமிழக முதல்வர்.

இதையும் படிங்க.!