chennireporters.com

உச்சநீதிமன்றத்தில் 11 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்திய தமிழக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார்.

வரதட்சணை கோரிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி வருண்குமார் தாமாக முன்வந்து சமரசம் செய்ய கோரியதை ஏற்று 11 லட் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்…

வருண் குமார் 2011 பிரிவில் இந்திய காவல் பணியில் தேர்வாகினார், முன்னதாக, 2010ம் ஆண்டு சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்னை காதலித்துள்ளார், மேலும் அவரின் குடும்பத்தாருடன் நெருங்கி பழகி, இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதனையடுத்து யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் பணி கிடைத்தவுடன் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள 2 கிலோ தங்கம், 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ சொகுசு காரை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என வருண்குமாரின் பெற்றோர் கேட்டதாகவும்,
இதுதொடர்பாக வருண்குமாரிடம் பிரியதர்ஷினி கேட்டபோது இதுபோன்று பல அதிகாரிகள் திருமணத்துக்கு வரதட்சணை பெற்றுள்ளனர் என கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரியதர்ஷினியை மிரட்டியும், அவரது மின்னஞ்சலை ஹேக் செய்து இருவருக்குமிடையே நடையெற்ற உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை வருண்குமார் அழித்தாகவும் பிரியதர்ஷினி புகார் அளித்துள்ளார்,
ஆனால் காவல்துறையினர் முதலில் வழக்கு பதியவில்லை என கூறப்படுகிறது.

இதனால், வருண்குமார் மீதான புகாரில் வழக்கு பதியப்படவில்லை எனக்கூறி பிரியதர்ஷினி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வருண்குமார் மீதும், அவரது தாய் கல்பனா மற்றும் தந்தை வீரசேகரன் மீது ஐ.பி.சி
406, 417, 420, 506/2, பெண் கொடுமை தடுப்பு சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டம் 66 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதேவேளையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமலிருக்க வருண்குமார் நிபந்தனையுடனான முன்ஜாமின் பெற்றார், ஆனால் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்காததையடுத்து, அவரது முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டது,
இதனைதொடர்ந்து கொஞ்சம் நாட்கள் தலைமறைவாகியிருந்த வருண்குமார், பின்னர் சைதப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டைந்தாதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார், இதனால் வருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவும் பிறப்பித்தது.

அதன் பின்னர் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வருண் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 26-06-2018ல் வருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல் அதிகாரி வருண்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.

அதில் பதிலளித்த தமிழக அரசு, சட்டவிரோதமாக கணிணியில் இருந்த ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்ததை சுட்டிக்காட்டி இருந்ததாகவும்,

குறிப்பாக அவர் பயன்படுத்திய செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்த சமர்பிக்க கூறியபோது, அது அவருக்கு எதிராக ஆதாரமாகிவிடும் என்பதால் அதனை வேண்டுமென்றே மாற்றியுள்ளார், எனவே அது ஐ.டி. சட்டம் 66ன் படியும், ஐ.பி.சி 204ன் கீழும் குற்றம் என ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டது.
அதை தற்போதும் உறுதிப்படுத்துவதாக தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தரப்பில் மனுதாரர் பிரியதர்ஷினியின் வழக்கறிஞர் விகஸ் சிங்கை அணுகியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் காவல் அதிகாரி வருண்குமார் ஒத்துக்கொண்டுள்ளார், இதனைதொடர்ந்து சமரச விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கை சமரசமாக முடித்து கொள்ள ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் மனுதாரர் பிரியதர்ஷினியின் வழக்கறிஞர் தரப்பை அணுகியுள்ளார்.

இதனையடுத்து சில நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த வழக்கில் சமரசர உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது, அதன்படி கடந்த 2011 முதல் மனுதாரர் பிரியதர்ஷினியின் சட்டப்போராட்டத்துக்காகவும், நேர விரயம் ஏற்பட்டதற்காகவும், நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதற்காககவும்
11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை காவல் அதிகாரி வருண்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்,

மேலும் அந்த இழப்பீட்டுத் தொகையை மனுதாரர் ப்ரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்ததோடு, அதனை உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் நல நிதிக்கு வழங்க ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு நிபந்தனை வைத்துள்ளார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து 11 லட்ச ரூபாயை உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் நல நிதிக்கு 10 நாட்களுக்குள் வருண்குமார் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

மேலும் இந்த விவகாரத்தில் வருண்குமாருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும், விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வரதட்சணை தடுப்பு சட்ட வழக்கு, ஐ.டி. சட்டம் 66ன் படியும், ஐ.பி.சி 204ன் கீழ் பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேவேளையில், இந்த வழக்கின் சாட்சிகளை வருண்குமார் எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது என்றும், இரு தரப்பும் எவ்வித பரஸ்பரம் இடையூறுகளை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது

இதையும் படிங்க.!