தமிழ் வளர்க்க வேண்டும் சிஎஸ்ஐ சென்னை பொறுப்பு பேராயர் உலகத் கிறிஸ்தவ தமிழ் பேரவை கூட்டத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள்-
சென்னை கெல்லிஸ் லைட் ஆடிட்டோரியத்தில் சி எஸ் ஐ சென்னை பேராயத்தின் சார்பாக உலக கிறிஸ்துவ பேரவை மாநாடு நடைபெற்றது
இதில் பல்வேறு தமிழ் கிறிஸ்தவ இலக்கியவாதிகள் ஆயர்கள் கலந்து கொண்டனர் இதில் சிஎஸ்ஐ வேலூர் பெயராயினும் சென்னை பேராயத்தில் பொறுப்பு பேராயுதமான ஷர்மா நித்தியானந்தம் மற்றும் முன்னாள் சென்னை பேராயர் தேவ சகாயம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர், ஜெகத் கஸ்பர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது தமிழகத்தில் கவர்னர் ரவி அவர்கள் ஏன் கிறிஸ்தவ அறிஞர் சிகன்பால் அவர்களை கொச்சைப்படுத்துகிறார் என்பதைக் குறித்து விளக்கம் அளிப்பதோடு தமிழகத்தில் தமிழை விளக்க உரையாய் மக்களிடம் கொண்டு சென்றது கிறிஸ்தவம் எதற்காக பல மிஷனரிகள் பாடுபட்டனர் எனக் குறிப்பிட்டார் முன்னதாக இவ்விழாவை குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
முடிவில் சென்னை பொறுப்பு பேராயர் சர்மா தற்போது ஆரம்பப் பள்ளிகளில் தமிழை காப்பாற்ற வேண்டும் . தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்க பள்ளிகளிலும் தமிழ் வளர்க்க வேண்டும் தற்பொழுது ஆங்கிலம் மோகம் இருந்து வரும் நிலையில் அதை ஊக்கு விக்க வைக்கக் கூடாது தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்கான சிறப்பு பணியை தமிழக அரசு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் கிருத்துவ தமிழ் இலக்கிய பேரவை சார்ந்த பிரமுகர்கள் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.