chennireporters.com

குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய சப்-இன்ஸ்பெக்டருக்கு முதலமைச்சர் வாழ்த்து.

குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காலை செய்தித்தாள்களில் மகிழ்ச்சி தரும் செய்தியை படித்தேன். அதை உங்களுக்கு பகிர்கிறேன்.

 

 

 

குற்றங்களை தடுப்பது மட்டுமே காவல்துறையின் பணி அல்ல நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பெண்ணால் ஊர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் அவர்களை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பரமசிவன் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பெண்ணலூர் பேட்டை என்கிற கிராமத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.  இவர் அந்த பகுதியில் உள்ள திடீர் நகருக்கு சென்றுள்ளார்.

அங்கு 50 குடும்பங்கள் பழங்குடி இன மக்கள் (இருளர்) வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல்  வீட்டில் வைத்திருந்தனர். அங்கு இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பியூலா அவர்களை சந்தித்து பரமசிவன் விவரம் கேட்டுள்ளார்.

அப்போது  தலைமையாசிரியர் அந்த மக்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லை  தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வைத்துள்ளனர். எவ்வளவு சொல்லியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பரமசிவன்  அந்த பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு முட்டையுடன் கூடிய சத்துணவு போடுகிறார்கள் குழந்தைகளுடைய எதிர்காலத்தை பாழாக்கி விட வேண்டாம். உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள் நான் யாருடைய காலிலாவது விழுந்து படிப்பு செலவிற்கு நான் உதவி செய்கிறேன் என்று தனது ஆதங்கத்தை அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

 

அது தவிர சர்வ சிக் ஷான் அபியான் திட்டம் என்கிற மத்திய அரசு திட்டத்தின் படி 14 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அவசியம் வழங்க வேண்டும். அதை தடுத்தால் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று என்று கூறினார்.

மேலும் குழந்தைகளுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று மனமுருகி கேட்டுக் கொண்டார்.  சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சப் இன்ஸ்பெக்டர் பரமசிவன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் இவர் இளங்கலை பிஎஸ்சி யும் முதுகலை விருதுநகரில் உள்ள செந்தில் குமரன் நாடார் கல்லூரியில் போலீஸ் நிர்வாகம் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க.!