மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் அது தவிர அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சீர்காழி உமையாள் பதி பகுதியில் சேதம் அடைந்த விளைநிலங்களையும் நெற் பயிர்களையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார். அது தவிர பச்சை பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை ஆய்வு செய்து மக்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க உத்தரவிட்டார்.
நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களுக்கு தரமான உணவு வு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ள தலைப்பு மற்றும் அகற்றும் பணிகளை கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார் எதிர்க்கட்சிகள் அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக எதை சொன்னாலும் நான் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
அது தவிர மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மக்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார் . பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ்பூவாணிக்குப்பம் , வல்லம்படுகை மயிலாடுதுறை மாவட்டம் , உமையாள்பதி காலனி , உமையாள்பதி வேளாண் விவசாய நிலங்கள், சீர்காழி புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.