chennireporters.com

ஒ.பி.எஸ்சுடன் ரம்மி விளையாடிய தோற்றுப்போன பா.ஜ.க. கே.ஆர்.எஸ். மணி தாக்கு.

ஓபிஎஸ் உடன் ரம்மி விளையாடி தோற்றுப் போன பாஜக எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவப்பு கம்பளம் விரித்து தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறது என்று தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.ஆர். சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த எட்டு மாத காலமாக ஓபிஎஸ் என்ற ஜோக்கரை வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அசைக்க முடியாத பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு ரம்மி விளையாடிக் கொண்டிருந்தது.

அவ்வப்பொழுது ஜோக்கரை வைத்து வெற்றி காண்பது, பின்பு அந்த ஜோக்கரை நம்பியே தோல்வி என்று பாரதிய ஜனதா கட்சி பல விதமான ஆட்டங்களை ஆடிக் கொண்டிருந்தது . ஆனால் எதற்கும் அஞ்சாத எடப்பாடியார், தான் நடந்த பாதையில் கல்லும் முள்ளும் கரடும் முரடும் எதுவானாலும் நெரு,நெருவென்று நடந்து மீண்டும்,மீண்டும் தன்னை உண்மையான உழைப்பாளி உண்மையான தொண்டன் என்பதை நிலை நிறுத்திக் காட்டினார என்று,முதல் பொதுக்குழு அவருக்கு மாபெரும் அங்கீகாரத்தை கொடுப்பதற்காக காத்திருந்ததோ அந்த பொதுக்குழுவையே இரவோடு இரவாக துவம்சம் செய்தது.

இரண்டாவது பொதுக் குழுவையும் அங்கீகரிக்காமல் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தன்னுடைய ஜோக்கரை வைத்து ஆட்டம் ஆடியது. இப்படி தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கைப்பாவையாக ஆக்குவதற்காக முயன்ற பாரதிய ஜனதா கட்சி, ஒரு பீஷ்மரை போர்க்களத்தில் 1008 அயோக்கியர்கள் அம்புகளால் துளைத்து எடுத்த போதும் தானே விரும்பாமல் தன் மரணம் சாத்தியமில்லை என்று கம்பீரமாக பீஷ்மர் நின்றதை ,கண்ணன் கையெடுத்து கும்பிட்டு தன் காரியத்தை சாதித்துக் கொண்ட கிருஷ்ணனை போல,இன்று எடப்பாடியார் அவர்கள் பீஷ்மரை போல நின்று வெற்றி கண்டார்.

ஆகவே பாரதிய ஜனதா கட்சி அவருடைய தயவை தானே வழிய வந்து வேண்டி விரும்பி ஆதரித்து தன்னுடைய பழி பாவங்களை எல்லாம் தீர்த்துக் கொண்டது. அப்படிப்பட்ட எடப்பாடியார் அவர்களை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது அதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உழைக்கும் தொண்டர்கள் மட்டும்தான் காரணம்.

அந்த உழைக்கும் தொண்டர்களை அரவணைத்து செல்வதற்கு எடப்பாடியார் தயக்கம் காட்டினால் எடப்பாடியாருக்கும் இந்த இடம் நிரந்தரம் அல்ல. ஆகவே ஒரு குறுநில மன்னர்கள் போல வசூல் செய்து அந்தப் பணத்தை மகாராணியின் மெய்க்காவலிரிடம் கொடுப்பது போல சசிகலாவிடம் கொடுத்து பழகிவிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அதிகாரம் செலுத்தியவர்களும் நொந்து போய் இந்த பொழப்பு நமக்கு தேவை தான் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இனி அப்படி நேராது அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அந்த வசூல் சக்கரவர்த்தி சசிகலாவை தூக்கி எறிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து அளித்த மாபெரும் பரோபகாரி எடப்பாடி அவர்கள்.

அது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம். ஆகவே இனி வரும் காலத்தில் எடப்பாடியார் கருணை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டன் வரை பலனடைந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எடப்பாடியார் பின்னால் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் கைகோர்த்து நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் அன்புடன் கே ஆர் எஸ் மணி முதன்மை ஒருங்கிணைப்பாளர் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்

இதையும் படிங்க.!